பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கலைஞர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு 'அய்யோ! இப்படி வசூலாகிறதே! இந்த அக்ரமம் எங்கேயாவது நடக்குமா? ஊராரே! உலகத்தாரே! கேளுங்கள்!” என்று ஒப்பாரி வைக்கத் தொடங்கியிருக்கின்றன ஒன்றிரண்டு ஏடுகள்! எழுத ஆருயிர் உடன்பிறப்பே! அவர்கள் இப்படி எழுத உன் ஆர்வத்தை தூண்டுகிறார்கள் என்று பொருள்! அவர்கள் சீற்றம் புறப்படப் புறப்பட-நீ சிந்திக்கத் தொடங்குகிறாய்! ஏன் இப்படிக் குதிக்கிறார்கள்? எதற்காக இப்படிக் கொதிக்கிறார்கள்? சிந்திக்கிறாய்! நமது கழகத் தலைவனை யல்லவா தாக்குகிறார்கள் என்று வேதனைப்படுகிறாய்! 10. நீ நீ இல்லாவிட்டால் கழகம் ஏது? கழகம் இல்லா விட்டால் தலைவன் ஏது? தலைவன் ஏது? தலைவன் என்பதற்காகத் தனி மதிப்பு கிடையாதே எனக்கு! அந்தச் சொல் கழகத்தோடு இணைந்திருப்பதால்தானே அதற்கு மதிப்பு! அந்தக் கழகத்தை, இழித்தும் - பழித்தும்-களங்கம் கற்பித்தும் ஏடுகளில் எழுதுவதின் காரணமாக அழித்து விடலாமென்று நம்புகிறார்கள்! நமது கழக வரலாற்றில் இப்படிப்பட்ட நாராச நடை யினர் எத்தனையோ பேரைப் பார்த் திருக்கிறோம்! பாவம், இப்போது அவர்களுக்கு முகவரியே இல்லாமற் போய்விட்டது! எதையும் தாங்கி நிற்கக்கூடிய உறுதி வாய்ந்தது நமது இயக்கம் என்பதை ஒவ்வொரு சோதனைக் கட்டத் திலும் நிரூபித்து வந்திருக்கிறோம்! இந்தா பத்து காசு என்று பிஞ்சுக்கரம் நீட்டித் தருகிறதே இளங் குழந்தை; அதற்கருகே அதன் தாய் நின்று அகமும் முகமும் மலர ஐம்பது காசோ, அல்லது ஐந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/28&oldid=1695252" இலிருந்து மீள்விக்கப்பட்டது