பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 19 ரூபாயோ அளிக்கிறார்களே அந்த நிகழ்ச்சி என் சோர்வு போக்கும் வலிமையை அல்லவா எனக்கு வழங்குகிறது! சோகச் செய்திகள் படையெடுக்கின்றன. நாடியில் துடைத்திட நீ எதிரே வந்து நிற்கிறாய், கம்பீர நோக்குடன்! அதனை மாயவரம் உறவினர் வீட்டு சோகம் பற்றி நேற்றுத் தான் குறிப்பிட்டேன். இன்று (20-5-76) காலை எழுந் ததும் கதறியழுதவாறு அன்சாரியும் அவரது தம்பிகளில் ஒருவரும் ஓடிவந்தனர். 'அம்மா காலமாகி விட்டார்கள் அண்ணா! எனக்கூறி என் மடியில் விழுந்து விட்டார். அன்சாரியை உனக்கு அவ்வளவாகத் தெரியாது. அவர் ஒரு வழக்கறிஞர். அவர் தம்பிகளில் ஒருவர் நமதுகொள்கை மறவர். அவரும் வழக்கறிஞர் தான்! நம் இதயங்களோடு கலந்திருக்கும் இளைஞர் ஏறு ! ஜின்னா என்பது அவர் பெயர்! அவரது அன்னையார் மறைந்தார் என்றதும், நானும் சாதிக்பாட்சாவும் நயினியப்பன் தெருவில் உள்ள அவர் வீட்டுக்கு ஒடினோம். என்னை அன்புடன் நேசித்த அந்த அன்னைக்கு கண்ணீர்த்துளிகளைத்தான் காணிக்கையாக்க முடிந்தது எந்த சோகத்தையும், எப்படிப்பட்ட சோதனையையும் சமாளிக்கக்கூடிய சக்தியை, உடன்பிறப்பே! உன் திரு முகத்தைக் காணும்போது என்னால் பெறமுடிகிறது. இதோ. என் எதிரே நிற்கிறாயே; எவ்வளவு ஆவலை உன் முகத்தில் தேக்கி நிற்கிறாய்! என் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட என் உயிரினுமினிய உடன்பிறப்பே! உன்னோடு நீண்ட நேரம் பேச முடியவில்லை! கோபிக்காதே! எனக்குள்ள நெருக்கடியான பணிகளை நினைத்து என்னை மன்னித்துக்கொள்! பேஷாமல் போகிறான, என்று கருதாதே! நிதியை மட்டும் பெற்றுக்கொள்கிறான்; ஐந்து நிமிடம் பேசலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/29&oldid=1695253" இலிருந்து மீள்விக்கப்பட்டது