பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கலைஞர் உன் காதா? எனக் கேட்கக்கூடும் நீ! என் செய்வது? கரத்தைத் தொடர்ந்து பல கரங்கள் என்னை நோக்கித், தாவுகின்றனவே! D இதற்கும் அவதூறு கற்பிக்கிற அக்கிரமக்காரர்கள், தங்கள் பத்திரிகைக் குழுவினருடன் நேரில் வந்தல்லவா,நீ வந்து நிற்கும் நேர்த்தியைக் காணவேண்டும்! நேரம் இடம் தருகிறவரையில் உன்னுடன் பேசுகிறேன், அளவளாவுகிறேன். நேரமில்லையேல் நீ என்பால் நெற்றிக் கண்ணைக் காட்டிவிடாதே! நம் இதயங்கள் என்றைக்கும் பேசிக் கொண்டுதானிருக்கின்றன! இல்லம் தேடிவரும் இனிய உள்ளமே! உன்னை இரு கை ஏந்தி வரவேற்கிறேன்; நெஞ்சால் தழுவிக்கொள்கிறேன். அன்புள்ள. மு. க. 21-5-76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/30&oldid=1695254" இலிருந்து மீள்விக்கப்பட்டது