பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெல்லியில் ராஜாஜி சிலை ! உடன்பிறப்பே, மனதிற்பட்டதை அப்படியே அப்பட்டமாகச் சொல்லி விடாமல், அதற்கு மெருகு வேலைகள் செய்தோ, அல்லது பட்டை தீட்டியோ நளினமாகச் சொல்லப் பழகிக் கொண்ட அரசியல் தலைவர்களுக்கிடையே, தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில் மனதிற்பட்டதை யாருக்கும் பயப்படாமல் எத்தகை சூழ்நிலையிலும் வெளிப் படையாக எடுத்துச் சொன்ன இரு தலைவர்கள் இருந் தார்கள். இரு துருவங்களைப் போல! அவர் பெரியார் அவர்களையும் ராஜாஜி அவர்களையும்தான் குறிப்பிடுகிறேன். இந்தச் சமயத்தில் திடீரென களைப் பற்றிக் குறிப்பிடவேண்டிய அவசியமென்ன, என்று கேட்கத் தோன்றும் உனக்கு. டெல்லி மாநகரில் ராஜாஜி அவர்களுக்குச் சிலையொன்று அமைக்கப் போகிறார்களாம். - விடுதலைப் போரின் தளகர்த்தர் அவர்! அரசியல் மேதை! இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் - சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்து அரியதோர் நிர்வா வாகத்தைத் திறம்பட நடத்தியவர் அமெரிக்க அதிபர் கென்னடியைச் சந்தித்து அணுகுண்டு சோதனையை நிறுத்துமாறு வற்புறுத்தியவர்-உலகில் எந்தப் பிரச்சினை யானாலும், அதுபற்றி அவரது உதடுகள் என்ன உச்சரிக் றன என்று அகில உலக அரசியல்வாதிகள் கூர்ந்து கவனித்தனர். இத்தனை சிறப்புக்களின் சொந்தக்கார கின்றன க-7A-2 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/31&oldid=1695255" இலிருந்து மீள்விக்கப்பட்டது