பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கலைஞர் ரான அவருக்கு டில்லியில் சிலை வைத்திட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.கே. தேவ் அவர்களைத் தலைவராகக் கொண்ட ஒரு குழுஉருவாகியிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் அந்தக் குழுவில் அங்கம் வகிக்கிறார்கள். நமது நண்பர் இரா. செழியன் அவர்களும் அந்தக் குழுவில் இருக்கிறார். குழுத் தலைவரின் கடிதத்திற்கிணங்க, தி. மு. கழகத்தின் சார்பில், ராஜாஜி அவர்களின் சிலை அமைப்புக்காக ஐயாயிரம் ரூபாய் நிதி ரண்டு நாட் களுக்கு முன்புதான் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லிப் பட்டினத்தில் ராஜாஜி அவர்களின் சிலை அமைகிறது என்ற மகிழ்ச்சியில் திளைத்திடும்போது அவரது சிறப்பியல்புகள் நினைவு அலைகளாக அசைந்தாடுவது இயற்கைதானே! கருத்து மாறுபாடுகள் ஆயிரம் இருப்பினும், கழக மாயினும் கழக அரசாயினும்,மாற்றுக் கருத்துடைய மதிப்பு மிக்கதலைவர்களை என்றைக்குமே அலட்சியப்படுத்தியதில்லை! அதற்குமாறாக, அவர்களுக்குரிய மரியாதைகளைச் செய்து பாராட்டியிருக்கிறோம். மிகத் தொடக்க காலத்தில் பெரியார் அணியில் நாம் நின்றபோது. ராஜாஜி அவர்களின் கருத்துக்களோடு பலமுறையும் பலமாக மோதியிருக்கிறோம். அவரும் பெரியாரையும் அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால். தனிப்பட்ட முறையில் பெரியாருக்கும் மூதறிஞருக்கும் உள்ளத்தில் ஒருதுளி பகையுணர்ச்சியும் இருந்தது கிடையாது. இருவரும் பாசமுள்ள நண்பர்களாகவே கடைசி வரையில் வாழ்ந் தனர். தன் மூதறிஞர் மறைந்தபோது, சுடுகாடு வரையில் வந்து, நோயையும் பொருட்படுத்தாமல் இறுதிவரையில் அங்கேயே அமர்ந்திருந்து, எரியூட்டப்பெற்றபோது இரு விழிகளிலும் பெரியார் நீர் பெருக்கிய காட்சியை யார்தான் மறக்க முடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/32&oldid=1695256" இலிருந்து மீள்விக்கப்பட்டது