பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கலைஞர்

  • •ஆமாம்! தேன்நிலவு

தொடங்கிவிட்டது!"- முடிந்து இல்வாழ்க்கை க என்பதாகும்! ரீதியாகக் குறைந்து, ராஜாஜி அவர்களுக்கும் நமக்குமிருந்த உறவு, கட்சி மெலிந்து போயிற்று என்றாலும் நாம் அவரை நேசித்ததும், அவர் நம்மை நேசித்ததும் இதயபூர்வமானதாகும்/ குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சி ரீதியான உறவு அவருடன் அறவே பட்டுப்போய் விட்டதெனினும், அந்த மகத்தான அறிவாளிக்கு நாம் செலுத்தவேண்டிய மரியாதையை என்றைக்குமே செலுத்தத் தவறியதில்லை. இந்திய விடுதலை வீரர்களுக்கான தாமரபத்திர விருது பெறுவோர் பட்டியலில் அவரது பெயரும் ஏடுகளில் இடம் பெற்றிருப்பதைக் கண்ணுக்குற்ற அந்தப் பெருந்தகை யாளர் உடனே எனக்குக் கடிதம் எழுதினார். அந்த விருதினை யாரிடமாவது கொடுத்தனுப்புக' என்று! நானே எடுத்து வருவதாகச் செய்தி அனுப்பினேன். அவ்வாறே எடுத்துச் சென்றேன். ஒரு தட்டில் பழங்கள், பூக்கள், தாமரபத்திர விருது, இவைகளுடன் பெரிய ரோஜா மாலையொன்று! நான் உள்ளே செல்வதற்குள் அவர் எழுந்து வாயிற்படி அருகே வந்து, அவர் தயாராக வைத்திருந்த ஜரிகை மாலையை எனக்குச் சூட்டி வாழ்த் தினார். அந்தப் புகைப்படம்கூட என் வீட்டில் இன்றைக்கும் இருக்கிறது. பெருந்தன்மைக்கும் அரசியல் பண்பாட்டுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த ஏந்தல் அவர்! அதைப் போலவேதான் பெரியாரும்! அவருக்கும் விடுதலைப் போர் வீரருக்கான தாமரபத்திரத்தை வழங்கச் சென்றபோது தனது உடல் தள்ளாமையையும் பொருட் படுத்தாமல் எழுந்து நின்று கொண்டார்! கழகப் பொதுக்குழு, கோவையிலே கூடி, மதுவிலக்கைச் ஒத்திவைப்பதென்று ஏகமனதாகத் சிறிது காலத்துக்கு .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/34&oldid=1695258" இலிருந்து மீள்விக்கப்பட்டது