பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 25 தீர்மானித்து. அதன்பிறகு சட்டப் பேரவையிலும் அறிவித்த பிறகு, மூதறிஞர் ராஜாஜி அந்த யோசனையைக் கைவிடச் சொல்லி என் இல்லத்துக்கே வந்துவிட்டார். எனக்கு ஒரே ஒரே பதைப்பு! பரபரப்பு! பரபரப்பு! எவ்வளவோ விளக்கினேன். . நிலைமையை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த உள்ளத்தில், ஏற்றுக்கொண்டுள்ள ஒரு கொள்கையில் அவ்வளவு பற்றும் பாசமும் இருந்தது! மீண்டும் கழக அரசு மதுவிலக்கை அமல்படுத்தியபோது அவர் இல்லையே என்பது தான் எனக்கு வருத்தம். கு ท அவர் மறையும் நேரத்தில் நாவலரும் நானும் அவர் அருகே செல்கிறோம். அவரது நெருங்கிய உறவினர் அனைவரும் பக்கத்திலேயே நிற்கிறார்கள். என் கையைப் பிடித்துக்கொண்டு ."உன்னைக் கைவிட மாட்டேன் என்று கூறி, என் கண்களைக் குளமாக்கிவிட்டார். மறைந்த அந்தப் பேரறிவாளருக்கு ஒரு அழகிய நினைவாலயத்தைக் கழக அரசின் சார்பில் ஆறுலட்ச ரூபாய் செலவில் அமைத்தோம்! காந்தி மண்டபம்! இருமருங்கிலும் ராஜாஜி நினைவாலயம் காமராஜர் நினைவகம் இயற்கை யாகவே அமைந்து விட்ட பொருத்தம். - -O ராஜாஜி நினைவாலயத் திறப்பு விழாவின் போதுதான் திரு. ஜே.பி. அவர்கள் ராஜாஜிக்கு டெல்லியிலேயே ஒரு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டுமென்றார். இன்று, அந்த அறிஞர் பெருமகனுக்கு இந்தியத் தலை நகரில் எழில்மிகு சின்னமாக அவரது ஏற்றமிகு சிலைவைக்கப் படுகிறது! அதற்கு நமது கழகம். தன்னாலான காணிக்கையை அனுப்பிவைத்துள்ள அந்த நேரத்தில் பழைய நினைவுகள் நெஞ்சில் பாய்ந்தோடி வந்தன; அது தான் இந்தக் கடிதம்! அன்புள்ள மு.க. · 22-5-76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/35&oldid=1695259" இலிருந்து மீள்விக்கப்பட்டது