பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எருக்கம்பூ மணக்குமா? உடன்பிறப்பே, .. “கொம்பேறி மூக்கன் என்று ஒரு பயங்கரமான பாம்பு! அதைப்பற்றி கிராமங்களிலே கதை போலச் சொல்வார்கள் அது யாரையாவது கடித்துவிட்டால், உடனே அது மரக் கொம்பின் உச்சியிலே ஏறி அந்த ஊர் சுடுகாட்டைப் பார்க்குமாம்! ஏன் தெரியுமா? தான் கடித்த ஆள் செத்துவிட்டானா என்று தெரிந்து கொள்வதற்காக! அதனால்தான் அதற்கு 'கொம்பேறி மூக்கன் என்று பெயராம். சுடுகாட்டில் பிணம் எரியத் தொடங்கினால், அது கொம்பைவிட்டுக் கீழே இறங்குமாம்! அதனுடைய நாச எண்ணத்தைப் புரிந்துகொண்டுள்ள கிராம மக்கள் அந்தப் பாம்பை ஏமாற்ற ஒரு தந்திரம் செய்வார்களாம். அது ஒருவனைக் கடிப்பதாக வைத்துக்கொள்வோம் உடனே ஊரார், அவனுக்கு வேண்டிய சிகிச்சைகளை அளிப்பார்கள்! அதற்குள் சிலபேர், வைக்கோலைக் காண்டுபோய் சுடலையில் போட்டுக் கொளுத்துவார்கள்! அந்த நெருப்பைப் பார்த்துவிட்டு கொம்பேறி மூக்கன், கொம்பிலிருந்து கீழே இறங்குமாம். அந்த நச்சரவம் கீழே இறங்க. இறங்க, அதனால் கடிக்கப்பட்ட மனிதனின் உடலில் ஏறிய விஷமும் இறங்கிவிடுமாம்! அவன் உயிர் பெற்று எழுவானாம்! ஏடுகள் சில அந்தக் கொம்பேறி மூக்கனைப்போல் குணம் படைத்த. இருக்கின்றன. கழகத்தைக் கடிக்கின்றன. ஆவலோடு கழகம் . அழிந்துபோய் விட்டதா? என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/36&oldid=1695260" இலிருந்து மீள்விக்கப்பட்டது