பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 27 கொம்பில் ஏறி உற்றுப் பார்க்கின்றன. சுடலையில் எரிகிற எந்தப் பிணத்தையோ கண்டுவிட்டு, கழகம் சாம்பலாகி விட்டது என்ற களிப்புடன் கீழே இறங்குகின்றன. அந்த நச்சுப் பாம்பின் பல்லுக்கும் ஈடுகொடுக்கக்கூடய வல்லமை வாய்ந்த ரத்தம், கழகத்திற்கு உண்டு என்பதை அவை உணராத காரணத்தால் மாக்கொம்பைவிட்டுக் கீழே இறங்கி வந்ததும். கழகம் கம்பீரமாக உலவிக்கொண்டிருப் பதைப் பார்த்துத் திகைக்கின்றன. மீண்டும் மீண்டும் தீண்டுகின்றன. மீண்டும் மீண்டும் மரக்கிளையில் ஏறிப் பார்க்கின்றன. ஏ மாண்டுவிட்டது என்று மகிழ்ந்தோமே, அதற்கு மாறாகக் கழகம் மகத்தான சக்தியாகவன்றோ வடிவெடுத்து நிற்கிறது என மருள்கின்றன! ரிகை உடன்பிறப்பே, நடுநிலை - நாகரீகப் பண்பாடு-பத்தி நெறி- இவைகளுக்கு மதிப்பளித்து காரிருள் பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த கருத்தோவியங்களாகவும் எத்தனையோ ஏடுகள் நாட்டில் நடமாடுகின்றன. அகத்தில் நல்ல கதிரொளியாகவும், கட்சிச்சார்புடைய ஏடுகளும் இருக்கின்றன ; அவைகள் தங்கள் கட்சிக் கருத்துக்களை மென்மையாகவோ, அல்லது கடுமையாகவோ கூறத்தக்க அளவுக்கு இருந்திடினும். இழிநிலை ஏடுகளாக இயங்குவதில்லை. வைகளுக்கு அப்பாற்பட்டு இருட்டடிப்பு மூலம் நமது கழகத்தை வலிவிழக்கச் செய்யலாம் என சில ஏடுகள் உள! கடைநிலை ஏடுகளாக உள்ளன சில கட்சிச் சார்புடைய ஏடுகள்! அல்லது கழக எதிர்ப்பு ஏடுகள்! இந்த ஏடுகள்தான் 'கொம்பேறி மூக்கன்' குணங்கொண்டவைகளாகத் கின்றன. திரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/37&oldid=1695261" இலிருந்து மீள்விக்கப்பட்டது