பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கலைஞர் சுட்டெரித்துப் பிடிசாம்பலாக்கிவிட்டோம் கழகத்தை, என்று கர்ச்சிப்பது! மறுநாள், கழகத்தின் பேருருவினைக் கண்டு சேறு சகதியை அள்ளி விசுவது! இப்படி எழுதுகின்றனவே ஏடுகள்-இது நியாயமா? என்று நீ என்னைக் கேட்டுத் துளைக்கிறாய்! உன் மனத்தைப் புண்படுத்த வேண்டுமென்பதுதான் அவைகளின் நோக்கம். உன்னால் வளர்க்கப்பட்ட கழகத்தைச் சீர்குலைக்க வேண்டு மென்பதுதான் அவைகளின் குறிக்கோள். ஆந்தை யிடம்போய் கிளியின் அழகை எதிர்பார்க்கிறாயே, அது ஆந்தையின் குற்றமா? உன் குற்றமா? குயில் போல ஏன் நீ கூவவில்லை? என்று கோட்டா னிடம் கேட்டால், கோளாறு; கேட்டவன் மூளையில்தான் என்பதுதானே பதிலாக இருக்கும்! மல்லிகை போல. மருக்கொழுந்து மணக்காமலிருக் கலாம்! அதனால் அதற்கு மணமில்லை என்று கூறிடார் எவரும் ! மணத்தின் வகை வேறு! ஆனால் மல்லிகை போலவோ, அல்லது மருக்கொழுந்து போலவோ, எருக்கம்பூ ஏன் மணம் தரவில்லை கோபிக்க முடியுமா? எனவே, நீ ஏடுகளைத் வேண்டும்! என்று தேர்ந்தெடுத்து வாங்கிட குயிலின் கீதமிருக்க கோட்டானிடம் ஓடாதே! கிளியின் அழகிருக்க, ஆந்தையைத் துரத்திக்கொண்டு அலையாதே! நாள்தோறும் நமது வீட்டுப் பெண்டிர் பற்றிச் செய்திகள் போடாவிட்ட ல் அவர்களுக்குத் தூக்கம் வருவதில்லை. நடிகர் கட்சி அதிகாரபூர்வமான ஏடொன்று அதனை இப்போது வாடிக்கையாகவே கொண்டுள்ளது. எஜமானின் உத்திரவு அப்படி! என்ன செய்யும் அது! எழுதிக் குவிக்கிறது! எழுதட்டும்—“எதையும் தாங்கும் இந்த இதயம்” என்று தாங்கிக் கொள்ளத்தான்வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/38&oldid=1695262" இலிருந்து மீள்விக்கப்பட்டது