பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் அவதூறு செய்திகள்! ஆபாச அர்ச்சனைகள்! புளுகு மூட்டைகள்! பொய்த் தகவல்கள்! 29 இவற்றையே மூலதனமாகக்கொண்டு, கையொன்று செய்ய, விழியொன்று நாட: கருத்தொன்று எண்ண, பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேச, நடமாடும் சில நாளேடுகள். தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள இந்தப் போர் முறையால் கழகத்தைச் சாய்த்துவிடலாம் எனக் கருது கின்றன! பல பேர் முயன்று தோற்றுப்போன முறை அது! உடன்பிறப்பே, நீ பிடிவாதமாக இருந்து - எத்தனை கவர்ச்சிகரமான திடுக்கிடும் பொய்களால் உன்னை ஈர்க்க முனைந்தாலும் அந்த ஏடுகளை வாங்குவதில்லை என்று சபதம் செய்து கொள்! கழகத்தை அழிக்க முனையும் ஏடுகளை - கழகம் வாழக் கூடாது எனக் கருதும் ஏடுகளை-கழக எதிர்ப்புக்கே முதலிடம் தரும் ஏடுகளை-நீ வாங்குவதில்லை. படிப்ப தில்லை என்று முடிவெடுத்துவிட்டால் பிறகு அவைகள் மூட்டிவிடும் எரிச்சல் உன் நெஞ்சை நெருங்காது! அன்புள்ள, மு.க. 23-5-76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/39&oldid=1695263" இலிருந்து மீள்விக்கப்பட்டது