பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர்தருவே! உடன்பிறப்பே, கொ காளுத்துகிற வெயில்! சென்னையில் 108 டிகிரி, 109 டிகிரி என்று அறிவிப்புக்கள் வருகிற நேரம். வெயில் தாங்காமல் மயங்கிக்கூட விழுந்து ஓரிருவர் இறந்து விட்டார்கள் என்ற செய்திகளைத் தாங்கிய வண்ணம் ஏடுகள் வெளிவருகின்றன. சற்று நேரம் வெளியில் நின்றால், தலை வெடித்துவிடுமோ என அஞ்சத்தக்க அளவுக்கு நெருப்புக்கோளம் நம்மைச் சுற்றி! வீசுகின்ற காற்றிலேயும் வெம்மை! வியர்வை அருவிகளாக உடல்கள்! வ்வளவையும் தாங்கிக்கொண்டு நடுப்பகல் பனிரெண்டு மணிக்கு அன்பகத்து வாயிலிலே நூற்றுக்கணக்கானவர்கள் நிற்கிறார்கள் ஒரு சிறிய ஓலைப் ய பந்தலோ அல்லது ஓட்டைப் பந்தலோகூட அன்பகத்து வாசலிலேகிடையாது! ஆடவரும் பெண்டிருமாக உடன்பிறப்புக்கள்! முதியவ வரும். மழலைகளும்! அனைவருமே அந்த நெருப்பு மழையில் நின்றுகொண்டு அக்கினி மூச்சை சுவாசித்துக்கொண்டி ருக்கிறார்கள். காலையில் இல்லத்துக்கு வருபவர்களைச் சந்தித்துவிட்டு, அவர்கள் வழங்குகிற விசாரணைக் கமிஷன் செலவு நிதியைப் பெற்றுக்கொண்டு 'முரசொலி' செல் கிறேன். அங்கு சிறிது நேர எழுத்துப் பணிக்குப் பிறகு அன்பகம் வருகிறேன். நான் வரும்போது காணுகிற காட்சிதான் முதலிலே குறிப்பிட்டேனே. அது! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/40&oldid=1695264" இலிருந்து மீள்விக்கப்பட்டது