பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 31 அய்யோ, இந்தக் கொடுமையான வெயிலில் நிற்கிறார் களே - என்று நெஞ்சு நெகிழ்கிறது எனக்கு! ஆனால், கோடைக்கானல் உச்சியிலும், அவர்கள் யாரும் அந்தச் சங்கடத்தைப் பொருட்படுத்திய தாகத் தெயரிவில்லை உதகைத் தோட்டத்திலும், குற்றாலத்து ஐந்தருவி ஓரத்தி லும் நிற்பது போன்ற நிலை தான் அவர்களுக்கு! அணிந்திருக்கும் ஆடைகள் எல்லாம் நனைந்திருக் கின்றன. அவ்வளவு வியர்வை கொட்டுகிறது. பிறகு ஒவ்வொருவராகவும் - ஒவ்வொரு ஊரைச் சேர்ந்த* அல்லது பகுதியைச் சேர்ந்த குழுவினராகவும் - அன்பகத்து மாடிக்கு வருகிறார்கள். அவரவர்கள் பகுதியில் கழகப் பணிகள், கட்டுக்கோப்பாகவும், அமைதியாகவும் நடை பெறுவதைப் பற்றி எங்களிடம் விரிவாகப் பேசவேண்டு மென்பதுதான் அவர்களது விருப்பம். என் செய்வது? அதற்குள் தான் மற்றொரு அலை உள்ளே புகுந்துவிடு கிறதே! . என்னைப் அண்ணே! என்ற அன்புக் குரலும்-தம்பீ என்ற பாசமிகு அழைப்பும் - மந்திரிப் பதவிபோன கு பார்த்து “ராஜா! சௌக்கியமா?' என்று நலம் விசாரிக்கும் முதியோரின் இதயக் கனிவும்-அடடா! என் முன்னே என் தாயும் தந்தையும். நம் அருமை அண்ணனும் வந்து நின்று வாழ்வது போலல்லவா இருந்திடக் காண் கிறேன். நிதி உடன்பிறப்பே. அவர்கள் வருகிறார்கள்—அவர்கள் தருகிறார்கள்-அவர்கள் வாழ்த்துகிறார்கள்— என்று நான் குறிப்பிடுவதில் உனக்குக் கோபமா? ஆமாம், உன் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறதே- கெஞ்சம் கோபம்தான்! என்னை நீ நன்றாகப் புரிந்து கொள்! இல்லத்திலும் அன்பகத்திலும் கூடி, இந்தா நிதி! இதோ இதயவாழ்த்து! எனக்கூறுகிறவர்கள் அனைவரையுமே நான் உன் உ ருவில்தான் காணுகிறேன், என் உடன்பிறப்பாகத் தான் காணுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/41&oldid=1695265" இலிருந்து மீள்விக்கப்பட்டது