பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கலைஞர் சில மாதங்களுக்கு முன்பு பேட்டிக்குத் தவம் கிடந் தோர். இப்போது நான் அழைத்தாலும் வரமாட்டார்! அதனாலே, நான் அழைப்பதுமில்லை. அவர்கள் எல்லாம் கார் ஊர்ந்து வரக்கூடியவர்கள். பழுத்திருக்கும் மரங்கள் பக்கம் மட்டுமே அந்தக் கார்கள் போகும்! நீயோ பஸ் களில் வரக்கூடிய உடன்பிறப்பு! ஏன், பாதப் பயணம்கூட செய்வதற்கு நீ தயங்குவதில்லை. அன்றைக்கும் நீ வந்திருக்கிறாய். உன்னை நான் அப்போதும் அலட்சியப்படுத்தாத காரணத்தால்தான் இன்றைக்கும் அந்த அன்புக் கயிறு அறுந்திடாமல் இருந்திடக் காண்கிறேன். அடையாளம் என் அன்பே! என் இதயமே! இந்த ஒரு சந்தர்ப் பத்தை மட்டும் மட்டும் "காலதேவன் எனக்கு வழங்காமல் இருந்திருப்பானேயானால், நான் பலபேரை தெரிந்து கொள்ளாமலே போயிருப்பேன். கழகத்தி லிருந்து 1961-ஆம் ஆண்டு சிலர் பிரிந்து சென்று புதுக்கட்சி தொடங்கி அண்ணா அவர்களைத் தாறுமாறாக ஏசிக் காண்டிருந்தபோது அண்ணா அவர்கள் மனம்நொந்து எழுதினாரே இது து நான் வந்த வழி! நானாக தேடிக் கொண்டது" என்று அண்ணனுக்கு வேதனையளித்தவர் களைப் போலத்தான் இப்போதும் நம்மிடமிருந்து விலகியோர் எனக்கு வேதனையளிக்கத் திட்டமிட்டுத் தாக்கு கிறார்கள். 6 இந்த வகையில்-மூன்றாண்டுக்கு முன்பு விலகியோர்; மூன்று மாதத்திற்கு முன்பு விலகியோர் - எல்லோருமே ஒரு நிலைதான்! ஒரு சிலர் கருதுகிறேன். உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள் என்று அண்ணா சொன்னதை போல, 'நான் வந்த வழியை நொந்துகொள்ளும் அதே சமயத்தில், அந்த வழியில் யார் யார் என்னுடன் கரம்கோத்து வந்தனர் - எப்படிப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/42&oldid=1695266" இலிருந்து மீள்விக்கப்பட்டது