பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் சூழ்நிலையில் வந்தனர் - அவர்கள் - 33 பெற்றது என்ன?- விட்டது என்ன? என்பவைகளையெல்லாம் திரும்பிப் பார்க் கவும், திருத்தங்களைச் செய்து எதிர்காலத்துக்கான கொள்ளவும் இந்த வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்ட “வரப் பிரசாதம்" என்றால், அது தவறாகாது! - - ஆனால், உடன்பிறப்பே! இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. "மாலைக்கு மட்டும் கழுத்தை நீட்டு வேன் - மற்ற வேலைக்கு வேறு ஆளைப்பார்!" என்று மொழி செயலாலே உணர்த்திடாமல்; யாலோ - விழியாலோ செய்து காட்டுகிற செம்மல்கள் பலர் எல்லா இடத்திலும், எல்லாக் காலத்திலும் இருந்திடவே செய்வர்! அவர்களை வெறும் செம்மல்கள் என்று மட்டும் செப்பிட மனம் வரவில்லை; 'தன்னலச் 'தன்னலச் செம்மல்கள்" என்றே தயங்காது பட்டமளிப்பு நடத்திடலாம் அவர்களுக்கு! 6 விளைந்த காட்டுக் குருவிகள்! வாய்ப்பு மன்னர்கள்! சந்தர்ப்பச் சக்கரவர்த்திகள்! அறுநீர்ப் பறவைகள்! ரு நாவினர்! இரு இன்னலைத் தீண்டார்! வாழக் கற்றோர்! இப்படி அடுக்கடுக்காக ஆயிரம் பட்டங்களைக்கூட வழங்கலாம். வேதனையாகத்தானிருக்கிறது! இப்படியுமா மனி தர்கள்? இதயம் கேள்விக்குறியின் வடிவமாகத்தான் ஆகிறது? நேற்று எவ்வளவு போற்றுதல்? இன்று எத்த கைய தூற்றுதல்? வைகளுக்கிடையேதான் மனத்தெம்பு வழங்க, நீ வருகிறாய்! மகிழ்கிறாய்! என்னையும் மகிழ்விக்கிறாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/43&oldid=1695268" இலிருந்து மீள்விக்கப்பட்டது