பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 N கலைஞர் உன் "தம்பீ! உனக்கு என்னிடம் உள்ளன்பு இருக் கிறது. உணருகிறேன்; என் உயிருக்கு அஃதன்றி வேறு ஊதியம் இல்லை; என் வாழ்க்கைக்கு அதனி னும் வலிவான ஊன்றுகோல் இல்லை. உனக்கு உள்ளன்பு நிரம்ப இருக்கிறதே தவிர, இன்று என்னைச் சிலர் சுடுசொல் கூறுகிறார்களே. அவர் களைப்போல, 'புகழ்ந்திட'த் தெரியுமா! உள்ளன்பு, என்னைக் கண்டதும், உன் அகத்தை யும் முகத்தையும் மலரச் செய்திடும். நான் காணும் காட்சிகளிலேயே என்னைக் களிப்பில் ஆழ்த்தும் காட்சி அது; அண்ணா! என்கிறாய் தழதழத்த குரலில்,-அதனைவிட இனிய இசை வேறு எனக்கு இல்லை; வேண்டேன்; அது சரி; ஆனால், புகழுரை பேச,உன்னால் முடியுமா? இன்று ஏசும் அவர்கள் முன்பு பேசியதுபோல! ஒருக் காலும் பேசமுடியாது. வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து, வர்ணஜாலங்களிட்டுக் கோர்த்து, கைவண்ணம் தெரியத் தயாரிக்க அப்படிப்பட்ட புகழாரங்களை ! உள்ளன்பு கொண்ட உன்னால் முடியாதே. அதுபோல, அது சொல்லன்பு கொண்டவர்களால் மட்டுமே முடியும் என்பது அவர்களின் இப்போதைய போக்கினால் விளக்கமாகத் தெரிகிறது. உனக்கு இதயம் வேலை செய்யும் அளவு நேர்த்தியாக உதடுவேலை செய்வ தில்லை; அதற்கு தனித்திறமை வேண்டுமே; நீ, வேண்டுமே, என் தம்பிதானே- எங்கிருந்து உனக்கு அந்தத் திறமை வந்துவிடும்! என்று அண்ணா அவர்கள் ஒருமுறை குறிப்பிட்டார், தம்பிக்கு எழுதியமடலில்! ஆம், அவரைப் பிரிந்து சென்றோர் சொல்லம்புகளை வீசியபோது! அந்த அண்ணனாக இருந்தல்ல; அந்த அண்ணனுக்கு ஏற்பட்ட அந்த நிலையிலேயிருந்து அதே வாசகங்களை இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/44&oldid=1695269" இலிருந்து மீள்விக்கப்பட்டது