பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை எப்போது சுவைக்கு? உடன்பிறப்பே, ளாமல் ஏன் ஒரு நாள் கடிதம் எழுதாமலிருந்தாலும் உடனே உன் கேள்விக் கணைகள் என் மீது பாயத் தொடங்கிவிடுகின்றன. “ஏன் எழுதுகிறான் இவன்?” என்று அலுத்துக்கொள் எழுதாம ரமல் விட்டுவிட்டாய் என்று கேட்பது ஒரு கட்சியின் தலைவன் என்ற முறையிலேகூட அல்ல. ஒரு எழுத்தாளன் என்ற முறையில் எவ்வளவு இன்பமூட்டக்கூடிய செய் என்பது எழுத்தாளனாக இருப்பவனுக்குத்தான் தெரியும். ஒரு எழுத்தாளனை சோர்வடையச் செய்வதற்கு, எந்த மருத்துவரும் கண்டுபிடிக்காத மருந்து ஒன்று இருக்கிறது! அந்த மருந்தைப் பயன்படுத்தினால் எப்படிப்பட்ட எழுத்து வேந்தனையும் அயர்வடையச் செய்து இரண்டு நாள் அவனை, பேனாவையே தொடாமல் ஆக்கிவிடலாம். என்ன அப்படிப்பட்ட அதிசயமான மருந்து? மருந்து என்பது நோய், குணமாகத்தானே தருவது! இது ஒரு நோயை உருவாக்குமென்கிறாயே, என்ன மருந்து அது எனத் துடிப்போடு கேட்கத் தோன்றும். கதையோ, கட்டுரையோ, ஏதோ ஒரு எழுத்தோவி யத்தை அவன் தீட்டுகிறான். மறுநாள் அது ஏட்டிலே வெளிவருகிறது. எழுத்தாளன், ஒருமுறைக்கு இரு முறை அதைப் படிக்கிறான். அத்துடன் அவனுக்கு மன நிறைவு ஏற்படுவதில்லை. பல்லாயிரக் கணக்கானவர்கள் அதைப் படித்திருப்பார்கள்; எனினும், தன்னுடன் நெருங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/46&oldid=1695271" இலிருந்து மீள்விக்கப்பட்டது