பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் வ - 37 யிருக்கும் நண்பர்கள் படித்திருப்பார்களா? என்ற ஐயமல்ல - ஆவல் எழுகிறது, அந்த நேரம் பார்த்து அவன் நண்பர்களும் வந்து சேருகிறார்கள். வந்தவர்கள் அவன் எழுதியதைப் பற்றிப் பாராட்டுவதையோ, விமர்சிப் பதையோ விட்டுவிட்டு விமானக் கடத்தல்காரன் பிடிபட்டதைப் பற்றியோ, வெயிலில் விசாகப்பட்டினத்தில் ஏழு பேர் இறந்ததைப் பற்றியோ, விரைவில் வெளிவர இருக்கும் திரைப் படங்கள் பற்றியோ, உரையாடத் தாடங்குகிறார்கள்! பொறுத்துப் பொறுத்துப் பார்த்த எழுத்தாளன், பொங்கும் ஆர்வத்துக்கு அணை போட முடியாமல்-‘'என்னப்பா! இன்று நான் எழுதியதைப் படித்தாயா?" என்று கேட்டே விடுகிறான். 'எழுதியிருக்கிறாயா? என்ன எழுதியிருக்கிறாய்? இப்படி ஒரு நண்பன்! "நான் இன்று பத்திரிகையே பார்க்கவில்லை! இன்னொருவன்! “என்னதான் எழுதியிருக்கிறாய் சொல்லேன்!' மற்றொருவன் இதுபோல பதில்கள் பாய்ந்தோடி வந்தால், பச்சை யாகவே இஞ்சியைக் கடித்தவனுடைய முகம்போல ஆகிவிடும், அந்தப் பரிதாபத்துக்குரிய எழுத்தாளனின் முகம்! இப்படிச் சோர்வை அளிக்கக்கூடிய பச்சை வெட்டு மருந்தைத் தான் நான் குறிப்பிட்டேன். நல்லவேளையாக, எனக் கு அந்த மருந்தை யாரும் கொடுத்துவிடவில்லை. நண்பர்கள் மட்டுமல்ல, என்னு டைய அன்பான எதிரிகள்கூட அவர்களும் எழுத்தாளர் களாக இருப்பதால், நான் எழுதுவதை நாள்தோறும் படித்திடுகிறார்கள் என்பது-உடனுக்குடன் சரியாகவோ, தவறாகவோ அவர்களுடைய கருத்துக்களை எதிரொலிப்பதி லிருந்து தெரிகிறது. எனவே ஏன் எழுதித் தொலைக் க-7A-3 B

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/47&oldid=1695272" இலிருந்து மீள்விக்கப்பட்டது