பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கலைஞர் கிறான் என்றில்லாமல், இவன் எழுதுவதால் நாமும் ஏதாவது பதில் என்ற பெயரில் எழுதுவதற்கு விஷயம் கிடைக்கிறதே என்ற ஆறுதலை அவர்கள் கொள்வார்கள் என்றே நான் நம்புகிறேன். படிக்கிறார்கள், நிந்திப்பவர்களும் படிக்கிறார்கள், சிந்திப்பவர்களும் நேசமும் பாசமும் கொண்டு என் நெஞ் ல் குடியேறியுள்ள உடன்பிறப்பாம் நீயும் தவறாது படிக்கிறாய்! அதனால்தான் ஒரு நாள் நான் ஓய்வு கோரினாலும் தர மறுக்கிறாய். நேற்று நான் கடிதம் எழுதவில்லையே தவிர, கவிதை யொன்றை நினைவுபடுத்தியிருந்தேனே! ஆசியாவின் ஒளிச்சுடர் பண்டித நேருவைப் பற்றி 1970- ஆம் ஆண்டு கவியரங்கமொன்றில் நான் தலைமை வகித்துப் பாடிய கவிதை! அந்தப் பெருமகனாரின் தன்னலமற்ற தொண்டு, தியாகம், உழைப்பு. சுறுசுறுப்பு, உறுதி, இரக்கம் வைகளெல்லாம் பொது வாழ்வில் ஈடுபடுவோர்க்குத் தேவையான முதலீடுகள் அல்லவா! நான் எழுதும் கடிதம் ஏட்டிலே வருகிறது; நீ எழுதும் கடிதம் வீட்டிலே குவிகிறது. இதழிலே வெளியிட இடமில்லாத காரணத்தால் அவைகளை இதயப் பேழையில் வைத்துப் பூட்டிக்கொள்கிறேன். வளங்கொழிக்கும் தமிழெடுத்து நீ எழுதும் மடல்களைப் படிக்கும்போது குளம் நிறைந்த தாமரை இலை மீது தவிக்கின்ற நீர் முத்துக்கள் போல் என் விழியோரம் தலை காட்டுகின்ற பனித்துளிகளை நீ அறிய மாட்டாய்! எத்தனை எத்தனை வரலாறுகளை எனக்கு நினைவூட்டு கின்றாய்! ஓரிரு உடன்பிறப்புக்கள் விடுத்துள்ள அஞ்சல் அட்டைகளில் உணர்வினையல்லவா பொழிந்திருக்கிறார்கள். குயில்கள் கூவுகின்றன குருவிகளின் சத்தம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/48&oldid=1695273" இலிருந்து மீள்விக்கப்பட்டது