பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் என் செவிகளைத் துளைக்கிறது. நிலவைப் பார்க்கிறேன்; நெருப்பாகத் தெரிகிறது. தோட்டம்தான், நானிருப்பது- இருந்தும்; வாட்டம் தீர்ந்தபாடில்லை. காதல் என்பது எளிதானதா? கண்ணீருக்குப் பின்தானே கழுத்தில் தாலி ஏறும்? இந்தக் கவிதைக் கடிதம் வரைந்திருப்பவர் சகோதரர் தான்! 39 ஒரு என்னைக் காணவேண்டுமென்பதையே காதல் ஓவியமாக்கித் தவிப்பைக் காட்டிக் கொள்கிறார். அண்ணன் தம்பிகளின் அழியாப் பாசத்தின் சின்னமன்றோ இத்தகைய மடல்கள்! கோடைக் அருவிகளாகின்றன. உடல்கள் கொடுமையால் வியர்வை அருவிகள் என் கண்ணில் சங்கம மாகின்றன. அங்காவது என் தலைவனின் முகம் மலராதா என ஏங்குகிறோம்!" இப்படி ஒரு உடன்பிறப்பு எழுதிய முடங்கல். இன்றைக்குப் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு என் எடுத்துக் கொடுத்து கையில் திருமாங்கல்யம் என்னை வாழ்த்தினாயே, அதன் மீது ஆணையாகச் சொல்கிறேன். எத்தனை இடர் உனக்கு வரினும் அணில்போல் உ பக்கத்தில் அடியேன் இருப்பேன்; நான் மட்டுமல்ல, நன்றியுள்ளவர் அனைவரும் இருப்பார்." இன்னொரு உடன்பிறப்பின் உள்ளம் மீட்டுகிற பாச வீணை இது! இது இந்த மடல்களையெல்லாம் படித்திடும்போது, வரையில் கிட்டாத அனுபவம் நமக்கு வலுவில் கிட்டி யிருக்கிறதே என்ற மகிழ்ச்சிதான் ஏற்படுகிறது எனக்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/49&oldid=1695274" இலிருந்து மீள்விக்கப்பட்டது