பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னுரை 1968ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 22ஆம் நாள் முதல் 1977ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் நாள் வரையில் நான் எழுதிய கடிதங்களின் தொகுப்பை பத்து தொகுதி களாக அபிராமி பதிப்பக நண்பர் பனையப்பன் அவர்கள் தமிழ்க்கனி பதிப்பகத்தாரிடம் உரிமை பெற்று முதல் பதிப்பாக வெளியிட்டுள்ளார்கள். 75 7 “நண்பா!” என விளித்துத் தொடங்கியும் “உடன் பிறப்பே!" என விளித்துத் தொடங்கியும், இன்னணம் "மறவன்' என முடித்தும். "அன்புள்ள மு. க" என முடித்தும் "மறவன் மடல்" வார இதழிலும், "நம்நாடு" வார இதழிலும் - மற்றும் பெரும்பாலும் நாள்தோறும் அல்லது வாரத்தில் நாலைந்து முறை "முரசொலி நாளிதழிலும் நான் எழுதிய கட்டுரைகளின் வடிவமே "கலைஞர் கடிதம்" எனும் தலைப்பில் உங்கள் கரங்களில் தவழும் இந்த நூல்களாகும் ! - 1977-க்குப் பிறகும் இன்ன மும் முரசொலியில் 'கலைஞர் கடிதங்கள் எழுதிக் கொண்டுதானிருக்கிறேன். உடன்பிறப்புக்களான கழகத்தினருக்குக் கூறவேண் டியவைகளையும், அவர்களை முன் வைத்து நாட்டுக்கு, சமுதாயத்துக்குச் சொல்ல வேண்டியவைகளையும் ஒரு பாச உணர்வுடன் வெளியிட இந்தக் கடிதம் எழுதும் முறை எனக்கு மெத்தவும் பயன்படுகின்றது. இந்தப் பத்து தொகுதிகளைத் தொடர்ந்து படிப் போர்க்கு சுமார் ஒன்பதாண்டு கால அரசியல் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கும். கூடுமானவரையில் தேதிவாரியாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/5&oldid=1695228" இலிருந்து மீள்விக்கப்பட்டது