பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கலைஞந் சிறையிலிருந்தவாறு நேரு பெருமகனார், தன் அருமை மகளுக்கு எழுதிய கடிதங்கள் பெரியதோர் நூலாக வெளிவந்துள்ளது. உனக்குத் தெரியும்! அதிலே குறிப்பிடு கிறார்! . உ "சோதனை என்று ஒன்று இருந்தால்தான் வாழ்வில் நமக்குச்சலிப்புத் தட்டாது! அதனால் நம் ஊக்கமும் உற்சாகமும் வளரும். நமக்கு உற்ற தோழன் என்றே அதைச் சொல்ல வேண்டும். சில சமயம் சாதாரண மனித வாழ்வு, சாரமற்று சப்பென்று ஆகிவிடுகிறது. உடலையும் உயிரையும் அற்பமாகக் கருதிப் பல பேர் உயரமான மலை உச்சிக்குப் போய்ப் பார்த்து வர முற்படுகிறார்கள். பல கஷ்டங்களையும் மீறி ஆபத்தையும் சமாளித்தோம் என்ற மகிழ்ச்சி அவர்களுக்கு ஏற்படுகிறது.. மலை உச்சிக்குப் போகும்போது எப்போதும் அபாயம் இருந்து வருகிறது. ஆனால் அதே சமயம் சுத்தமான காற்றை உட்கொள்கிறோம். தொலைவில் உள்ள இயற்கைக் காட்சி களைக் கண்டு மகிழ்கிறோம்." பண்டித நேரு அவர்களின் இந்தக் கருத்தை மனித தேவையான மணிவாசகம் என்று சமுதாயத்துக்குத் கூறுவது மெத்தப் பொருத்தமன்றோ! எனவே சிற்றூர், பேரூர், நகரங்கள் எனப் பல பகுதி களிலுமிருந்து எனக்கு எழுதப்படுகிற உடன்பிறப்புக் களின் கடிதங்கள் அனைத்தும், ஆறுதலை வழங்குகின்றன. வாழ்க்கை எப்போது சுவையாக இருக்கும்? என்று நேரு அவர்கள் குறிப்பிடுகிறாரோ; அந்தச் சீரிய கருத்தைத் தான், உடன்பிறப்பே நீ எழுதுகிற மடல் என் மனத்தில் மேலும் மேலும் ஆழமாகப் பதிய வைக்கிறது! ஆகவே, மடல்களைப் படிக்க நான் இடையிடையே ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்துக் கொள்வதற்காகத் தயவு செய்து கோபிக்காதே! அன்புள்ள மு.க. 28-5-76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/50&oldid=1695275" இலிருந்து மீள்விக்கப்பட்டது