பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சம் முன்னேறுமே! உடன்பிறப்பே, "எங்கே மனத்தில் அச்சம் இல்லையோ, எங்கே தலையானது, நிமிர்ந்து நின்றிடுமோ, எங்கே அறிவு முடக்கப்பட்டு இல்லையோ, எங்கே குறுகிய மதில்கள் எழுப்பப்பெற்று இந்த உலகம் சீர்குலைறவில்லையோ, எங்கே உண்மையின் ஆழத்திலிருந்து தூயசொற்கள் பீறிட்டுக் கிளம்பிடுமோ, எங்கே பகுத்தறிவு என்னும் பேரருவி காய்ந்து சருகான பழக்கமென்னும் கடும் வெப்பப் பாலை நிலத்தில் மண்ணுக்குள் மறையாமல் பாய்ந்திடுமோ, எங்கே உன் துணைவலிமையால் பரந்த சிந்தனை, செயல்களை நாடி இந்த நெஞ்சம் முன்னேறிச் சென்றிடுமோ, அந்த இனிய சொர்க்க வாழ்வு கண்டிட அருமைமிகு எந்நாடு விழித்தெழ தந்தையே! அருள் பொழிந்திடுவாயாக!' . வ்வாறு கவியரசர் தாகூர், பாடிய முறையீட்டுக் கவிதை "கீதாஞ்சலி"யில் இடம் பெற்றுள்ளது பகுத் தறிவுப் பேரருவி, பழக்க வழக்கமெனும் பாலைவனத்தில் பாய்ந்தோடிட வேண்டுமாம். அப்படிப் பருகியோடும் போது அந்தத் தெளிந்த நீரை பாலைவனத்து மணல் உறிஞ்சிவிடக் கூடாதாம். எனவே, மண்ணுக்குள் மறை ள் யாமல் அந்த நீர் பழமைப் பாலையைப் பகுத்தறிவுச் சோலையாக்க வேண்டுமாம். பகுத்தறிவுப் பிரச்சாரம், காட்டில் எரிந்த நிலவாக ஆகிவிடக்கூடாது என்பதிலே தாகூர் கொண்டுள்ள அக்கறையைத்தான் இந்த வரிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/51&oldid=1695276" இலிருந்து மீள்விக்கப்பட்டது