பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கலைஞந் தளிவாக்குகின்றன. பாலைவனத்தில் ஓடுகின்ற தெண் ணீரின் கதியும் அப்படித்தானே ஆகிவிடும். அதனால்தான் கவிஞர். மிக்க கவனத்தோடு கூறுகிறார். மண்ணுக்குள் தண்ணீர் மறைந்துவிடக் கூடாதென்று! இங்கே பாலைவன மணல் என்பது யாரைக் குறிப்பிடு கிறது? மக்கள் சமுதாயத்தைத்தான்! அந்தச் சமுதா யத்தை வளமாக்கப் பாய்ந்துவரும் பகுத்தறிவு வெள் ளத்தை அந்தச் சமுதாயமே. தனக்கெனப் பயன் படுத்திக்; கொள்ளாமல் வீணாக்கிவிடக் கூடாதல்லவா? அதனால் தான் ரவீந்திரர்: "எங்கே பகுத்தறிவு என்னும் பேரருவி, காய்ந்து சருகான பழக்க மெனும் கடும் வெப்பப் பாலை நிலத்தில் மண்ணுக்குள் மறையாமல் பாய்ந்திடுமோ,' என்று உருக்கமும் உணர்ச்சியும் இழையோடிட மிகுந்த முன் எச்சரிக்கையுடன் பாடுகிறார். பகுத்தறிவு என்றதும் உடனே, நாத்தீகவாதம் - கடவுளைப் பற்றிய ஆராய்ச்சி - புராண இதிகாசங்களுக்கு எதிர்ப்பு - பழம்பெரும் நூல்களுக்கு எதிர்ப்பு-என்று இருசாராரும் பொருள் கொண்டிடக் கூடாது! "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" "எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு அப்பொருள் எனும் குறட்பாக்கள் வழிநின்று சிந்தித்துச் செயல் படுவதே பகுத்தறிவின் பயனாகும். விஞ்ஞானத்தின் விரி வாக்கமும், அதன் விளைவாக மனிதன் வெண்ணிலாவுக்குப் பயணம் சென்று திரும்பியதுமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிற உலகத்தில், இந்தச் சாதனைச் சரித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/52&oldid=1695277" இலிருந்து மீள்விக்கப்பட்டது