பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் திரங்கள், எப்படிப் படைக்கப் பற்றியே 43 படுகின்றன என்பது கவலைப்படாமல்; அந்த விஞ்ஞானக் கருவி களுக்குப் பொட்டிட்டு, பூ சூட்டி. சாம்பிராணி தூபம் காட்டிக்கொண்டிருக்கிற வேலையில் அல்லவா சிலர் வேக மாக ஈடுபட்டிருக்கின்றனர். ஆரியபட்டா' விண்வெளியில் பயணம் நடத்திக் கொண்டிருக்கிறது. இந்தியநாடு, ந்திய நாடு, விஞ்ஞானத்துறையில் முன்னேறுகிறது எனக் கண்டு மகிழ்கிறோம். அதே நேரத்தில் கையை மூடித்திறந்தால் சிறியதோர் சிவலிங்கம் வருகிறது. அல்லது சிங்கப்பூர் கெடிகாரம் வருகிறது. குறைந்த பட்சம் குங்குமம் விபூதியாவது வருகிறது என்று மந்திர தந்திர மாயாவிகளின் காலில் விழுந்துகிடக்கிற மக்கள் கணக்கற்றோர் இருக்கிறார்களே! விதி! வறுமைக்கும் வாட்டத்திற்கும் காரணம் என்ன? ஒருவன் வாழவும் ஒருவன் வாடவுமான நிலை இருப் பானேன்? அது தலையெழுத்து! - என்ற உயர் சாதிக்காரன் - தாழ்ந்த சாதிக்காரன் கேடு உலவிடுவானேன்? அதுவா? அது போன ஜன்மத்துப் பலன்! இப்படிப்பட்ட ஆணவம் நிறைந்த பதில்கள், அறியாத மக்களின் உடலிலே, உள்ளத்திலே சவுக்கடிகளாக விழுந்து கொண்டிருந்தன. அதைத் தடுத்து நிறுத்தியதுதான் பகுத் தறிவு! சாதி, மதமென்னும் சமுக அமைப்புக்களால் ஏற்பட்ட பேதங்களை அகற்றுவதற்கு மட்டுமல்ல, உழைக்க ஓர் பிரிவு - உண்டு கொழுக்க ஓர் பிரிவு - என்ற பொரு ளாதார பேதத்தையும் சுட்டிக்காட்டி ஏற்றத்தாழ்வற்ற சமதர்ம சமுதாயம் அமைத்திடவும் பகுத்தறிவு மன்றமே தீர்ப்பு எழுதியது. க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/53&oldid=1695278" இலிருந்து மீள்விக்கப்பட்டது