பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கலைஞர் அதைத்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், "பகுத்தறிவு மன்றத்தில் உலகம் என்ற பழைய முதலாளியினை நிற்க வைத்து' விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்குவதுபோல் கவிதை யொன்று தீட்டுகிறார். "கைத்திறனும் வாய்த்திறனும் கொண்ட பேர்கள் கண் மூடி மக்களது நிலத்தையெல்லாம் கொத்திக் கொண்டேப்ப மிட்டு வந்ததாலே கூலிமக்கள் அதிகரித்தார் என்ன செய்வேன்?" என்று உலகப்பன் கைபிசைந்து நிற்கிறான், அந்த மன்றத்தில்! பாரதிதாசனின் பகுத்தறிவு மன்றம், என்ன கட்டளையிடுகிறது தெரியுமா? "இந்நிலையில் இருப்பதனால் உலகப்பா நீ! புதுக் கணக்குப் போட்டுவிடு. பொருளை எல்லாம் பொதுவாக எல்லார்க்கும் நீ குத்தகை செய்" துறை இதுவே, பகுத்தறிவு மன்றத்தின் ஆணை! எனவே சமுதா யத்துறை, பொருளாதாரத்துறை, அரசியல் அனைத்திலுமே பகுத்தறிவு நீரோடை தங்குதடையின்றிப் பாய்ந்தோடிட வேண்டும் அப்போதுதான் நாடு வாழும்! நலிவு தீரும்! பண்பு சிறக்கும்! பளிங்கெனத் தெளிவு பிறக்கும்1 "பாலைநிலத்தில் பகுத்தறிவுப் பேரருவி எங்கே பாய்ந்திடுமோ. ' 99 எனக் குறிக்கும் வங்கத்துத் தங்கக் கவிஞர், "எங்கே மனத்தில் அச்சமில்லையோ எங்கே தலையாது நிமிர்ந்து நின்றிடுமோ," எனச் சுட்டிக் காட்டுவதின் சரியான பொருள் னக்குப் புரிகிறதல்லவா? தலையானது நிமிர்ந்து நிற்க க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/54&oldid=1695279" இலிருந்து மீள்விக்கப்பட்டது