பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் "சுயமரியாதை" 45 வேண்டும் - அதுதானே உடன்பிறப்பே! "தன்மானம் . என்ற சொற்களால் சுட்டிக்காட்டப் படுகிறது! தலை நிமிர்ந்து நிற்கவேண்டும்-மனத்தில் அச்சம் கூடாது என்றால்; அடக்கமின்றி வணங்காமுடியாக வாழவேண்டும் என்றே -‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்ற குறளை மறந்துவிடவேண்டும் என்றோ - யாரும்கூற மாட்டார்கள்! நேற்றைய மட ல் எடுத்துச் சொல்லி யிருந்தேனே, பண்டித நேரு அவர்களின் பொன் மொழியை, சோதனைதான் வாழ்வுக்குச் சுவையளிப்பதென்று, அத நிலையில் - தலையானது நிமிர்ந்து நிற்கவேண்டும். மனத்தில் அச்சம் அகற்றிட வேண்டும். அச்சமும். தலையிறக்கழம் கொண்ட சமூதாயம் அடிமைப் படுகுழியில்தானே கிடக்க நேரிட்டது ஏன்? என்று கேடக அச்சம்! எப்படி என்று கேட்பதற்குத் தலை நிமிர முடியாத கொடுமை! ஆண்டை, ஆண்டவனின் படைப்பு! அடிமைகளோ, புழுக்களின் மறுபதிப்பு! இந்த நிலை, உலக முழுவதும் இருந்ததே --இன்று பெரும்பாலும் மாறிவிட்டதே! எவ்வாறு? 6 6 தலைநிமிர்ந்து நில்" என்று - தாகூர் சொல்கிறாரே, அந்தத் தைரியம் பிறந்ததாலே! "மனிதரில் நீயுமோர் மனிதன் மண் அன்று! இமை திற!" வ்வாறு மனத்தின் அச்சம் போக்கப்பட்ட தாலே! பகுத்தறிவு அருவியாகப் பாய்கிறது! ஏன் என்ற தெம்பான கேள்வி எழுகிறது! அச்சம் தொலைகிறது! தலை நிமிர்கிறது! அதன்பிறகு உலகைச் சீர்குலைக்கும் குறுகிய மதில்கள் எழுப்பப்படுவதில்லை! தாகூரின் அந்தப் பரந்த உள்ளத்தைத்தான் பாரதிதாசனாரும் தனக்கே உரிய நடையில் நமக்குத் தெளிவாக்குகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/55&oldid=1695280" இலிருந்து மீள்விக்கப்பட்டது