பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 "தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம் தொல்லுலக மக்களெலாம் 'ஒன்றே' என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே' கலைஞர் தன்னலம், முனை முறிந்து தேய்ந்து போவதாலே சண்டை சச்சரவே இல்லை என்று புரட்சிக கவிஞர் புன்னகை பூக்கிறார். "தன்பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவை உண்டு தானுண்டென்பான் சின்ன தொரு கடுகுபோல் உள்ளங்கொண்டோன் தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்’” என்றல்லவா தன்னலக்காரனுக்குக் கவிஞர் பட்டம் சூட்டு கிறார். "எங்கே பரந்த சிந்தனை செயல்களை நாடி உன் துணை வலிமையால் இந்த நெஞ்சம் முன்னேறிச் சென்றிடுமோ," என்று தங்கக் கவிஞர் தாகூர். பிரார்த்தனை செய்வது, 'தந்தையே!" என்று இறைவனை நோக்கி! உன் துணை வலிமை" என்ற சொற்றொடருக்கு நான் பொருள் கொள்வது, உடன்பிறப்பாகிய உன்துணை வலிமையைத்தான்! 'நானிருக்க பயமேன்' 8 6 என்று என் நாக்கு முழங்கிய தில்லை. ‘நீ இருக்க பயமேன்" என்றுதான் என் இதயம் நிம்மதியாகத் துடித்துக்கொண்டிருக்கிறது. எங்கே அச்சமற்றதும் தலை நிமிர்ந்ததுமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/56&oldid=1695281" இலிருந்து மீள்விக்கப்பட்டது