பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன் உழைப்பின் உருவம! உடன்பிறப்பே, (VIET NAM-A HISTORICAL SKETCH) வியட் நாம் - ஒருவராற்று வரைவு' 'என்ற நூலைப்படிக்கும் வாய்ப்பு கிட்டியது எனக்கு! ஆண்டுக் கணக்கில் அமெரிக்கப் போர்த்தளவாடங்களின் எதிர்ப்பைச் சமாளித்து கோசிமின் தலைமையிலே திரண்டெழுந்த மக்கள் சக்தி இறுதியாகச் செங்குருதியில் தோய்ந்த வெற்றிமணிக் கொடியை, தன் வீறுகொண்ட கரங்களிலே தூக்கிப் பிடித்த நிகழ்ச்சி என்றாவது ஒரு நாள் ஆதிக்கக்காரர்களுக்குப் பாடம் கிடைத்தே தீரும் அமைந்ததை உலகம் அறியும். என்பதற்கான சான்றாக வானை வளைத்துக்கொண்டு அமெரிக்க விமானங்கள் குண்டுமாரி பொழிந்த காட்சிகளும்; வயல் வெளிகளில் நின்றவாறு தங்கள் திண் தோள்களை உயர்த்தி வியட்நாம் மக்கள் அவைகளை சமாளித்த வீரகாவியங்களும் அந்நாட்டு வரலாற்றில் வைர எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிகளாகும். வியட்நாமியர்கள், இன்று நேற்றல்ல - ஏறத்தாழ நாலாயிரம் ஆண்டுக்காலமாக ஏதோ ஒரு போராட்டத்தில் ஈடுபட்டே தீரவேண்டியவர்களாகி விட்டார்கள். நூலாசிரியர் ஒரு இடத்திலே அழகாகக் குறிப்பிடுகிறார்; The Vietnamese land is no freegift from Nature" அதாவது வியட்நாம் மக்களின் நிலம், இயற்கையின் மூலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/58&oldid=1695283" இலிருந்து மீள்விக்கப்பட்டது