பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 499 அந்த மக்களுக்கு வழங்கப்பட்ட வெகுமதி அல்ல! என்று உருக்கம் மேலிட உணர்ச்சி பொங்கிடக் கூறுகிறார். அங்குலம், அங்குலமாக அந்த மண்ணை வளப்படுத்தும் முயற்சியில் மக்கள் தொடர்ந்து பாடுபட்டார்கள். ஆண்டுக்கு ஆண்டு நூற்றாண்டுக்கு நூற்றாண்டு வியட்நாம் மக்கள் வெள்ளப் பெருக்கினோடும்; வறட்சி, புயல் போன்ற இயற்கைக் கொடுமைகளோடும் விடாது போர் நடத்த வேண்டியிருந்தது. ரத்தம். வியர்வை ஆகியவற்றைப் பாய்ச்சி அயராமல் உழைத்ததின் விளைவாகத்தான் அந்து மண்ணை செழுமை மிக்கதாகச் செய்திட முடிந்தது. இப்படி யெல்லாம் வியட்நாம் மக்களின் கடும்போராட்டத்தையும், நூலாசிரியர். கடின உழைப்பையும் சித்தரிக்கிற "One easily understands why he is so deeply attached to his land" என்று முடிப்பது இதய நாளங்களின் எழுச்சித் துடிப்பை எதிரொலிப்பதாய் அமைகிறது ஒரு வியட்நாயன் ஏன், தன்னுடைய நாட்டை இவ்வளவு ஆழமாக நேசிக் கிறான் என்பதை இந்தக் காரணங்களின் வாயிலாக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதே ஆசிரியரின். கருத்தாகும். வர்களின் பகை பல இயற்கைச்சேட்டைகளை எதிர்த்து மட்டுமல்ல; படையெடுப்புக்கள் பலவற்றையும் நூற்றாண்டுக் காலமாக சந்தித்து வாகை சூடிட வேண்டிய இக்கட்டான சூழ்நிலைகள் அந்த நாட்டுக்கு இடை டைவிடாது முளைத்துக் காண்டேயிருந்தன, கணவன் மனைவிக் கிடையே உள்ள அன்பு எனினும், தாய் மகனுக்கிடையே எழுந்திடும் பாசமெனினும் - யாரோ ஒருவருக்கு அபாயம் ஏற்பட்டு அதிலிருந்து அவர்கள் மீண்டும் எழுகிறபோது முன்னைக் காட்டிலும் அதிகமாகிவிடுகிறதல் தல்லவா; அன்பும்,பாசமும்! சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கிக்கொண்டு தளராது பீடுநடை போட்ட வியட்நாம் மக்கள் தங்கள் திருநாட்டின்மீது அளவற்ற பாசத்தைப் பொழிந்தனர். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/59&oldid=1695284" இலிருந்து மீள்விக்கப்பட்டது