பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 நாடு கொள்ளைக்காரர்களின் கலைஞர் சீனப் பேரரசர்களின் படையெடுப்புகளுக்கு ஆளான கொடுமைக்கும், அடிமைப் படுத்தும் ஆதிக்கக்காரர்களுக்கும் ஈடுகொடுத்து நொந்து போன நிலைக்கு ஆளான நாடு! அந்த நாட்டின் வீரக்கனலை அணைந்து விடாமல் காப்பாற்றிய பெருமை, ஆங்கு தோன்றிய இலக்கியங் களுக்கு உண்டு! கவிதை ஆர்த்த பாவலர் பெருமக்களுக்கு உண்டு! தீரம் செறிந்த அந்த இலக்கியப் படைக்கலன்களை அந் நாட்டு மக்கள், தங்கள் இதயங்களில் ஏந்தியிருந்த காரணத் தால்தான், துப்பாக்கிக் குண்டுகள் வெடித்துக்கொண் டிருந்த சமயத்திலும், அமெரிக்கப் படைகளின் ஆரவாரம் மிகுந்திருத்த நேரத்திலும், விமானங்கள் மூலம் மனித வேட்டை நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலும், வியட்நாமில் உள்ள அகழ்வாராய்ச்சியாளர்கள் பூமியைத் தோண்டி பழங்கால ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். விஞ்ஞானிகள் அறிவுக் கூடங்களில் அமர்ந்து விஞ்ஞான ரகசியங்களைக் கண்டு பிடுப்பதில் முனைந்திருந்தனர். தலைவர்கள், எதிர்கால இருப தாண்டுக்கான ஆக்கப்பூர்வமான வளர்ச்சித் திட்டங் களுக்கான புதிய கண்ணோட்டத்தைச் செலுத்தினர் என்று வரலாறு செய்திகளைச் செதுக்கிக் காட்டுகிறது. வரலாற்று மனிதர்களைப் பற்றி உடன்பிறப்பே வியட்நாம் பற்றிய சில வரலாற்றுக் குறிப்புக்களை நான் சுட்டிக்காட்டுவது வேறு எதற்காகவு மல்ல! மிக்க சிரமப்பட்டு, கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து, வியர்வையும், குருதியும் கொட்டி, தொடர்ந்து சோதனை களோடு போராடிய மக்கள், தங்களின் தேசத்தை எல்லா வற்றுக்கும் மேலாக மதிப்பார்கள் என்பதற்கு வியட்நாம் ஒரு எடுத்துக்காட்டு! இந்த இலக்கணம், வியட்நாம் போன்ற நாடுகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடியவை அல்ல!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/60&oldid=1695285" இலிருந்து மீள்விக்கப்பட்டது