பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 51 சற்று சிந்தித்துப் பார்! அறுபது ஆண்டுக்காலமாகப் பல முனைகளிலே எதிர்பைச் சந்தித்து, சுயமரியாதை இயக்கமாக, நீதிக்கட்சியாக, திராவிடர் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகமாக இயங்குகிற நமக்கும் நமது இயக்கத்தின்மீது அத்தகைய பற்றும் பாசமும் எழுகிறதல்லவா? அவரவர் சார்ந்திருக்கிற ஒவ்வொரு இயக்கமும், அல்லது கட்சியும் எத்தனைாயா சோதனைகளுக்கும், தியாகத் திற்கும் தன்னை ஆளாக்கிக் கொண்டிருக்கக்கூடும். அப்படிப்பட்ட கட்சிகளில் ஒன்றாகத் தி.மு.க திகழ் கிறது! வேதனை நெருப்பில் சோதனைப் புயலில் நமது கழகம் தள்ளப்பட்டபோதெல்லாம்-வியட்நாம் மக்கள் சோர்வடையாமல் எழுந்து நின்றதைப்போல், நமது கழக வீரர்கள் சோர்வடையாமல் - தங்கள் சுகம் மறந்து, கழகத்தைக் காப்பாற்றியிருக்கிறார்கள். நமது தானைத்தலைவர் அண்ணாவை, அறுபதாம் ஆண்டு கூட அவருக்கு நிறைவடைவதற்கு முன்பு, இழந்தோமே- அதைவிடப் பெரிய சோதனையா, இனிமேல் நமக்கு வரப் போகிறது! 9 9 வியட்நாமில் பழங்காலத்துப் போர் ஒன்றுக்கான வீரக் கவிதைகளைப் பாடுகிறார் ஒரு கவிஞர் பெருமகன் (Nguyen Trai) "கியென் இத்ரே" என்பது அவர் பெயர்! 'மிங்' என்னும அயல் நாட்டு வம்சத்தினரின் ஆட்சியை அகற்று கிற அந்நாளையப் போர் ஒன்றில் “மா” என்ற ஆற்றங் கரையில் வியட்நாம் வீரர்கள்பெற்ற வெற்றியைக்குறிக்கும் கவிதை வரிகள் அவை! அதில் ஒரு இடத்தில் கூறுகிறார்; "On our chariot, the best seat was left empty, waiting for a talented General." “நமது ரதத்தின் உன்னதமான பீடம் ஆற்றல்மிக்க தளபதிக்காக வெற்றிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/61&oldid=1695286" இலிருந்து மீள்விக்கப்பட்டது