பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கலைஞர் மாக விடப்பட்டுக் காத்திருக்கிறது" என்று சோகத்தை வெளிப்படுத்துகிறார். உடன்பிறப்பே. நமது அண்ணன் மறைந்தபோது- நமது கழக ரதத்திலும் அதே நிலைதானே ஏற்பட்டது! இன்றைக்கும் அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டுவிட்டதாக நான் கூறவும் தயாராக இல்லை, நம்பவும் தயாராக இல்லை. அவ்வாறு நம்பி, என்னையே நான் ஏமாற்றிக்கொள்ளவும் தயாராக இல்லை. எனினும், ரதம் ஓடிக்கொண்டிருக்கிறது! நெற்றிடத்தில் என்னைத் தூக்கி உட்கார வைத்திருக்கிறாய்! நாவலர் அடிக்கடி கூறுவதுபோல நாம் அனைவருமே அண்ணாவின் ஒவ்வொரு கூறாக இருக்கின்ற காரணத்தால் அந்த வெற்றிடம் நிரப்பப்பட்டதுபோல் கழகப் பணிகள் தொய் வின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தேர் ஓடுகிறது என்றால், தேர், தானாக ஓடுகிறது என்று பொருள் அல்ல! தேரை இழுக்கிறார்கள் அல்லது இயந்திரம் வைத்துத் தள்ளுகிறார்கள் என்று பொருள்! அதுபோலத் தலைமையில் இருக்கிற நாங்கள், உன்னால் இழுக்கப்படுகிறோம் - எங்களை நீதான் செயல்பட வக் கிறாய்! உன் ஆர்வமும், கொள்கைப் பற்றும்தான் கழகத்தைக் காத்திடுகிறது! அதைத்தான் நாள்தோறும் காண்கிறேன். வியட்நாம் மண்மீது, அந்த மக்களுக்கு ஏற்பட்ட பாசம், அவர்கள் உழைப்பாலே உயர்ந்த மண் என்பதால்! உனக்கு கழகத்தின் மீதுள்ள பாசம், இது உன் உழைப் பாலே உயர்ந்தது என்பதால்! அல்லவா உடன்பிறப்பே! அன்புள்ள மு.க. 31-5-76 D

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/62&oldid=1695287" இலிருந்து மீள்விக்கப்பட்டது