பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 55 கிறார்களே-அது கண்டா. உற்சாகமிழந்து விட்டாய்! சே! சே! இருக்கவே இருக்காது! என் காலத்தில் நம்மைவிட்டுப் பிரிந்தவர்கள் என்னை ஏசியதைவிடவா இப்போது உன்னை ஏசிவிடுகிறார்கள்? முன்பு பிரிந்தோரும் இப்போது பிரிந் தோரும் ஒன்றிணைந்து இழிமொழி கூறுகின்றனர் என் பதை அறிவேன் எனினும், சந்தனத்தைச் சகதியென்றால் மணமா மாறும்?" என்று நீ தானே தம்பீ கவிதை எழு எழுதி யிருக்கிறாய்! பிறகேன் உற்சாகக் குறைவு உனக்கு? உன் தோளில் ஏறி உன் தலையில் அமர்ந்திருந்த தோழர்கள் சிலர், இப்போது உன் காலை மிதித்துக் கடுஞ் சொல் பேசவும் ஆகிவிட்டதே என்ற துயரமா உனக்கு? இருக்கவே முடியாதே! என் தம்பிக்கு ஊராரே உற்றார்! உடன்பிறப்புக்களே சொந்தபந்தங்கள்! அன்னை முகம் காண்பதிலும் இந்த ண்ணன் முகம் காண்பதே அவனுக்கு மகிழ்வூட்டும் நிகழ்ச்சி என்று நான் என் துணைவி உன் அண்ணி ராணி யிடம் எத்தனையோ முறை கூறியிருக்கிறேனே தம்பீ, வேறு எந்தக் காரணத்தினால்தான் வீழ்ந்து பட்டது உனக்கு உற்சாகம்? அண்ணனே நீ இப்படியெல்லாம் கேட்பாய்! அறிந்தவனல்லவா நான்! உன்னை அடையாறு மருத்துவமனையில் மரணப்படுக்கையில் நீ கிடந்தபோதும், மூச்சு தடைபடாமல் இருப்பதற்காக தொண்டைக் குழியில் ஒரு ரப்பர் குழாயைப் . பொருத்த மருத்துவர்கள் முனைந்தபோது, அறையில் இருந்த என்னை கூப்பிடச்சொல்லி 3 9 பக்கத்து உனக்கு இஷ்டந்தானா கருணாநிதி?' என்று கேட்டு என்னைத் தேம்பித் தேம்பி அழவைத்த என் தெய்வ மாயிற்றே நீ! என் மூத்த உடன்பிறப்பே, நீ கேட்கிற எதுவுமல்ல காரணம், நான் உற்சாகம் இழந்திருப்பதற்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/65&oldid=1695290" இலிருந்து மீள்விக்கப்பட்டது