பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்புலப் பெயனீர் போல! உடன்பிறப்பே, உன்னுடைய அன்புக்கும் அழியாத பாசத்துக்கும் நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் உனக்கு! எப்போதும் நீ என்னுடனேயே இருக்கிறாய் என்ப தற்குச் சான்றுரைப்பதாகத்தானே ஜூன் மூன்றாம் நாள் நிகழ்ச்சி அமைந்திருந்தது! கோலாகலம். கொண்டாட்டம், இசை, கூத்து, நடனம் என்றெல்லாம் விழாச் சிறப்புக்கள் பலவற்றை இணைத்துக்கொண்டு நடைபெறும் பிறந்த நாள் நிகழ்ச்சி யல்ல! வா! வா! என்று உன்னை வலிந்து அழைத்திடவும் இல்லை! வந்தால் விசாரணைக் கமிஷன் செலவு நிதி தந்திட வேண்டும் என்றுதான் அறிவிக்கப்பட்டது. உன் உருவம் பல்லாயிரக்கணக்கிலே பரந்து விரிந்து பெருகிய வண்ணமிருந்தது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து, பத்து என்று மட்டுமல்ல, இருபது காசு, முப்பது காட்சியை காசு என்று காசுகளையும்கூட நீ வழங்கிய எப்படித்தான் என்னால் மறக்கமுடியும்? ஏறத்தாழ முப்பத்தி ஏழாயிரம் ரூபாயை அந்த ஒரு நாளில் மட்டும் நீ, நிதியாக அளித்திருக்கிறாய் என்கிற போது இந்தக் கழகத்தின் ஒவ்வொரு அங்குல வளர்ச்சி யிலும் நீ காட்டுகிற தூய்மையானதும், எள் முனையின் அளவுகூடக் கள்ளங்கபட மற்றதுமான அக்கறைத் தெளிவாகத் தெரிகிறது. 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/67&oldid=1695292" இலிருந்து மீள்விக்கப்பட்டது