பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 59 நீயும் நானும் நீண்ட நாட்கள் ஒன்றாக இருக்கும் உடன் பிறப்புக்களாயிற்றே; எனவே செம்புலப் பெயனீர் போல நெஞ்சம் கலப்பதில் வியப்பென்ன நமது அன்புடை இருக்க முடியும்! அந்த அன்புடை நெஞ்சங்கள் கலந்த நாளாகத்தான் ஜூன் மூன்றாம் நாளை நான் கருதுகிறேன்! பல்வேறு பகுதிகளிலுமிருந்துவந்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து நான் ஈடுபட்டுள்ள பணிக்கு உறுதியையும் வழங்கிய உனக்கு நன்றி! நன்றி! என்று நிறுத்தாமல் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக் கிறேன். அன்புள்ள, மு.க. 5-6-76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/69&oldid=1695294" இலிருந்து மீள்விக்கப்பட்டது