பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தில் நட்பு! உடன்பிறப்பே, லக்கியத் இதிகாசங்களில், வரலாறுகளில் நட்பின் இலக்கணத் திற்கான மனிதர்களைக் காண்பது போலவே திலும் காணுகிறோம். 9 9 நட்பு என்பது மிகச் சிறப்புடைய ஒரு பண்பு என்பதினா லேயே உயிர்காப்பான் தோழன் " என்று நமது முன்னோர் மொழிந்தனர். தன் நண்பன் தேசிங்கு மன்ன னுக்குத் துணை நிற்க வேண்டி, திருமண மேடையி லிருந்தவாறே மகமத்கான் போர்க்களம் நோக்கிப் புறப் பட்டுச் சென்றான் என்பதும் பொன்னார் மேனியளாம் புது மணப் பெண்ணைத் தவிக்கவிட்டுக் களம்பட்டான் என்பதும் நட்புக்கு எடுத்துக்காட்டல்லவா? பாரதக் கதையில் கர்ணன் நட்பின் சிகரமாகத்தானே காட்சியளித்துத் தனது நண்பனுக்காக உயிரையும் இழந் திடுகின்றான். இதோ, தோ, இலக்கியத்தில் இரு நண்பர்கள், ஒருவன் தமிழ்ப் புவியாளும் மன்னன்! இன்னொருவன் கவியாளும் மன்னன்! கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் எனும் இருவர்! புலவரோ பாண்டிய மன்னன் அவையில் இருப்பவர் பாண்டிய நாட்டு மன்னன் அறிவுடை நம்பி அறத்துக்குப் புறம்பானவைகளைச் செய்யமாட்டான் என்பதாலும், தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/70&oldid=1695295" இலிருந்து மீள்விக்கப்பட்டது