பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 61 மனைவியின் மாட்சியினால் இல்வாழ்வில் தொல்லை இல்லை என்பதாலும், பெற்ற மக்களும் கற்றறிவாளர்கள் என்ப தாலும், சான்றோர் பலர் அவர் வாழும் ஊரில் இருக் கின்றனர் என்பதாலும், தனக்கு வயது அதிகமாகியும்கூட, நரை விழவில்லை என்று காரணம் கூறிப் பெருமைப்பட்டுக் கொள்ளும் பாடலொன்றைப் பாடியவர் அவர்! யாண்டுபலவாக, நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின் மாண்ட என் மனைவியொடு, மக்களும் நிரம்பினர் யான் கண்டனையர் என் இளையரும், வேந்தனும் அல்லவை செய்யான். காக்க; அதன் தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.' 9 இவ்வளவு சிறப்புக்களும் ஒத்திருப்பது என்பது இயலாத ஒன்று! எனினும் பிசிராந்தையார் வாழ்ந்த பாண்டி மண்டலத்துச் சிற்றூர் அத்துணை மாட்சிகளும் ஒரு சேரப்பெற்று, கவலையறியாது அனைவரும் வாழ்ந்த காரணத்தால் மூப்பு எய்தியபோதும் தலை ம் நரைத்திட வில்லை இவ்வாறு I பாண்டி மன்னனின் பெருமை கூறும் அவருக்கு கோப்பெருஞ் கோப்பெருஞ் சோழன்மீது நீங்கா நட்பு! இருவரும் ஒருவரையொருவர் கண்டு, அளவளாவிஏற்பட்ட நட்பா என்று கேட்பின்; இல்லை! ஒருவரையொருவர் காணாமலே அவர்கள் நட்பு உருவாயிற்று! உறுதியாயிற்று! அதற்கோர் எடுத்துக்காட்டு பின்வரும் புறப்பாடல். 'அன்னச் சேவல்! அன்னச் சேவல்! கொள் வென்றி அடுபோர் அண்ணல் நாடுதலை அளிக்கும் ஒணமுகம் போலக். கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும் மையல் மாலை யாம் கையறுபு இனையக் குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி, வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/71&oldid=1695296" இலிருந்து மீள்விக்கப்பட்டது