பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 ° 6 சோழநன் னாட்டுப் படினே, கோழி உயர்நிலை மாடத்துக், குறும்பறை அசைஇ வாயில் விடாது கோயில் புக்கு, எம் பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும்பிசிர் ஆந்தை அடியுறை' எனினே, மாண்ட நின் இன்புறு பேடை அணியத், தன் அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே கலைஞர் அன்னச் சேவலே! போரில் வாகை சூடும் பெரு மிதத்துடன் நிலம் காக்கும் நல்லவன் முகத்தின் ஒளிபோல முழுநிலா ஒளிவிடும் இந்த நேரத்தில் என் நண்பன் சோழ னிடம் செல்ல இயலாது நான் வருந்துகிறேன். நீயோ, குமரிமுனையில் அயிரை மீனை உண்டு வடமலையை நோக்கிச் செல்லுகிறாய்! வழியில் சோழநாட்டு உறையூர்க்குச் சென்றால், அங்குள்ள உயர்நிலை மாடத்தில் நீ தங்கி- பிசிர் என்ற ஊரில் உள்ள ஆந்தையார் என்ற புலவரின் அடியவன் என்று நீ உன்னை அறிமுகப்படுத்திக்கொண் டால், உடனே உன் அருகே இருக்கும் பேடைக்கு மன்னன், தன் அன்பின் சின்னமாக அணிகலன்களை ணிகலன்களை வழங்குவான் என்று தங்களது நட்பின் பெருமையை விவரிக்கிறார் 9 கோப்பெருஞ் சோழன். வடக்கிருத்தல் என்று வழங்கிய உண்ணாநோன்பிருந்து உயிர்விடும் நிலைக்கு நாடு துறந்து செல்கிறான். அவனோடு உண்ணாநோன்பிருந்து உயிர் துறக்க பூதநாதனார், பொத்தியார் என் என்னும் ம் பெருமக்கள் வந்து இணைகின்றனர். புலவர் காணாமலே நட்பு ஓடோடி வருகிறார். வயப்பட்ட பிசிராந்தையாரும் 6 6 அதுகண்ட புலவர் பொத்தியார், ஆகா! பெரும் சிறப்போடு நாடாண்ட இந்த மன்னனே உண்ணாநோன் பிருந்து உயிர்விட எண்ணினான். அதுவே வியப்புக்குரியது! வெகுதொலைவில் வாழுகின்ற சான்றோன் பிசிராந்தையும் எம் மன்னனுடன் இணைந்து உயிர்விட உயிர்விட வந்துள்ளாரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/72&oldid=1695297" இலிருந்து மீள்விக்கப்பட்டது