பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிப் பயணம்! உடன்பிறப்பே, திருச்சி நிகழ்ச்சிகள் எழுச்சியூட்டத்தக்க வகையில் அமைந்திருந்தன. சென்னை எழும்பூர் நிலையத்திலேயே பயணிகள் பலரும் என்னைச் சூழ்ந்து கொண்டு விசாரணைக் கமிஷன் செலவு நிதிவழங்கத் தொடங்கிவிட்டனர். இலால்குடியில் புகைவண்டி நிலையத்தில் ஆரம்பமான வரவேற்பு-திருச்சி வரையில் உற்சாகம் அளித்திடும் வண்ணம் இருந்தது. திருச்சி புகைவண்டி நிலையத்தில் கடந்த ஒன்பது ஆண்டுக் காலத்தில் நான் ஆர்வம் துள்ளும் வரவேற்பைப் பெற்றதில்லை. தகைய என்னையே கூட்டத்தில் போட்டு நசுக்கிக்கொண்டு "கருணாநிதி வாழ்க!" என்று வான் முட்ட வாழ்த் தொலி எழுப்புகிற நிலையில் கழகக் கண்மணிகள் உணர்ச்சிக் காவியம் படைத்தார்கள். திருச்சி பிலிருந்து அம்பில் திருமண வீட்டுக்கு, சுமார் பதினைந்து மைல் தொலைவு தொலைவு செல்வதற்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு மேலாயிற்று என்றால் வழி நெடுக எத்தனை இடங்களில் உடன் பிறப்புகளின் அன்புக்குக் கட்டுப்பட வேண்டியிருந்து என்பதைப் புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன். . காலை 9 மணிக்கு திருச்சியைவிட்டுக் கிளம்பி, அம்பி லுக்கு 11 மணிக்குமேல் சென்றடைந்தோம். அங்கு பகல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/74&oldid=1695299" இலிருந்து மீள்விக்கப்பட்டது