பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 65 12 மணி அளவில் திருமண விழாவினை நிறைவேற்றி வைத்துவிட்டு, பொன்மலை திருமண விழாவுக்கு 1-30 மணிக்கு வந்து சேர்ந்தோம். நண்பர் காமாட்சிதான் காருக்குச் சாரதி! அம்பில் அழகமுத்து, மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் மற்றும் மாவட்டக் முன்னணியினர் என்னுடன் கழக வந்தனர். நண்பர்கள் பாரதியும், சபாபதியும் உடன் இருந்தனர். காலை முதல் மாலையில் பயணிகள் விடுதியில் 66 கியூ' வரிசையில் நின்று ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று அளித்த வரையில் விசாரணைக் கமிஷன் செலவு நிதி ஐயாயிரத்தைக் கடந்து ஆறாயிரத்தை எட்டிப் பிடிக்கத் தாவியது. எல்லாமே பாராட்டத்தக்க அளவுக்கு நடந்தன. ஆனால் நிகழ்ச்சி முறை அமைப்புக்கள்தான் எனக்கும் பெரும் தொல்லையைக் கொடுத்து, காத்திருந்த மக்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் மிகுந்த சிரமத்தை அளித்து விட்டது. . அம்பில் என்னும் சிற்றூர் இலால்குடியிலிருந்து நாலு மைல் தூரத்தில் உள்ளது. நான் சென்ற மலைக்கோட்டை விரைவு வண்டி, இலால்குடியைத் தாண்டித்தான் திருச்சி செல்கிறது. நான் இலால்குடியிலேயே இறங்கியிருந்தால், அம்பில் திருமணத்தை காலை 9 மணிக்கே முடித்துவிட்டு, வழிநெடுகவும் உள்ள வரவேற்புகளைப் பெற்றுக்கொண்டு திருச்சி வழியாகப் பொன்மலைக்கு 12 மணிக்குள் சன் றிருக்க முடியும். இப்போது என்ன ஆயிற்று? திருச்சியி லிருந்து 9 மணிக்குப் புறப்பட்டு, அம்பிலில் திருமணம் முடிந்து மீண்டும் அதே வழியாக திருச்சிவந்து பொன்மலை சென்றிடுகிற வரையில் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது. இது திருச்சி நிர்வாகிகளைக் குறைகூறுவதற்காக அல்ல! இனி, நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்கிற ஏ மற்ற ஊர்க்காரர் களாவது பயணத்தை எளிதாக்கவும், நேரத்தை, ஒழுங்கு படுத்தவும் பயன்படுமே என்பதற்காகக் குறிப்பிடுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/75&oldid=1695300" இலிருந்து மீள்விக்கப்பட்டது