பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கலைஞர் பிற்பகல் உணவு மூன்று மணிக்கு அருந்திவிட்டு, சற்று நேரம் கூட ஓய்வு கொள்ளாமல் வேலை செய்ய இயலா தல்லவா? வயது ஐம்பத்தி மூன்று மறந்து விடாதே! . . அதுதான் போகட்டுமென்றால் மாலை ஐந்து மணிக்கு செய்தி சொல்லுகிறார்கள்; திரும்பிச் சென்னைக்குச் செல்ல ரயிலில் டிக்கெட் இல்லை என்று! காலையிலேயே முயற்சித் திருந்தால் கிடைத்திருக்கும். அல்லது சென்னையிலே டிக்கெட் வாங்கியவர்களாவது போகவர டிக்கெட் எடுத்திட முனைந்திருந்தால் இந்தத் தொல்லை வந்திருக்காது அம்பிலும், வெங்கடாசலமும் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டார்கள். காலையில் சென்னையில் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள வேண்டும். எப்படியும் இரவே நான் திரும்பியாக வேண்டும். ஏழுமணிக்கெல்லாம் நண்பர் காமாட்சியின் காரிலேயே சென்னை நோ க்கிப் புறப்பட்டேன். இரவு 12 மணிக்கெல்லாம் சென்னையில் சேர்த்துவிடுவதாக+ சொன்னார். உளுந்தூர்ப் பேட்டைக்கு முன்பாகவே கார் சக்கரத்தில் ஒன்று பழுதாகி விட்டது. உளுந்தூர்ப் பேட்டையில் அதனைச் சீர் செய்து பொருத்திக் கொண்டு விழுப்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தோம். மீண்டும் அதே சக்கரத்தில் காற்று காற்று இறங்கி விட்டது. தோ தா ஒரு தேய்ந்துபோன ஆணி குத்தி ஓட்டை விழுந்து விட்டது. விழுப்புரத்தில் அதைச் சரிசெய்து கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். மதுராந்தகம் தாண்டியதும் மறுபடியும் கார் சக்கரத்தில் பழுது!நல்ல வேளையாக - சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு வாடகைக் காரில் இருந்தவர்கள். தங்கள் காரில் உள்ள ஒரு உபரிச் சக்கரத்தை எங்கள் காருக்குத் தந்தார்கள். இரவு 12 மணிக்கு சென்னை வந்து சேர நேரம் குறித்த வர்கள், விஷய விடியக் கண் விழித்து, விடிந்த பிறகுவந்து சேர்ந்தோம். - வந்தவுடன் பார்த்தால், சிறிது நேரத்துக்கெல்லாம் அணையுடைந்த வெள்ளம்போல் மூன்று பேருந்து களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/76&oldid=1695301" இலிருந்து மீள்விக்கப்பட்டது