பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 67 பண்ருட்டி, குளித்தலை, கோவையிலிருந்து உடன்பிறப்புக் களும் தாய்மார்களும் வந்து கூடிவிட்டார்கள், அவர் களையும், மற்றும் பல பகுதிகளில் இருந்து வந்தவர்களையும் சந்தித்து விட்டு, அவர்கள் வழங்கிய நிதியையும் பெற்றுக் கொண்டு சென்னையில் முருகேசன் வீட்டுத் திருமண விழா வுக்குச் சென்றேன். இரவு முழுதும் தூக்கமில்லை.இன்றும் ஓய்வில்லை; நாளை எட்டாம் தேதி புறப்பட்டு ஒன்பதாம் தேதி கோவை மாவட்டத்து நிகழ்ச்சிகள், பிறகு 11-ஆம் நாள் பெங்களூர் நிகழ்ச்சி! கோவையிலிருந்து - ஊட்டி வழியாகப் பெங்களூர் போகலாம் என்றுகூட நீ யோசனை சொல்வாய்! நான் கூட நினைத்தேன் - ஒரு நாள் ஓய்வு கிடைக்குமே என்று! ஆனால் 10 ஆம் தேதி எனக்குச் சென்னையில் முக்கிய அலுவல் இருக்கிறது. முடிந்தால் இரண்டொரு நாள் ஓய்வுக்கு 11ஆம் தேதியை யொட்டித்தான் முயற்சிக்க வேண்டும். இவ்வளவு சிரமங்கள் இருப்பதால்தான்; நீ என்னைப் பயன்படுத்திக் கொள்வது பற்றி நான் கவலைப்படவில்லை; மறுநாள் நான் மற்ற ஊர்களுக்கும் பயன்படும்படியாக என் பயணத்தை வகைப்படுத்தி எளிதாக்குமாறு உன்னைக் கேட்டுக்கொள்கிறேன். 0 சென்னைக்குத் திரும்பிட, டிக்கெட் எடுப்பது பற்றி இரண்டு மணி நேரம் முன்னதாக முயற்சி நடைபெற்றிருந் தால் ரவெல்லாம் கண் விழித்துப் பயணம் செய்கிற B துன்பம் ஏற்பட்டிருக்காதல்லவா? பெய்கிற மழை, தானாகவே ஒரு வாய்க்காலாக வடிவ மெடுத்துக் கொள்வது போல கழகக்கண்மணிகள் இயங்கிட லாகாது. ஆர்வம் நிறைந்த தொண்டர்கள் ஏற்கனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/77&oldid=1695302" இலிருந்து மீள்விக்கப்பட்டது