பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலித்தொகையில் ஒரு காட்சி உடன்பிறப்பே, மலர்ப் பொய்கையொன்றினைக் காண உன்னை அழைக் கிறேன். எப்போதும் அரசியல் சிந்தனையிலேயே இருக்கும் உனக்கு ந்த மலர்ப் பொய்கை சிறிது நேர மனமாற் றத்தை அளிக்கும். காலையிலிருந்து பல்வேறு வேலைகளைக் கவனித்துவிட்டுக் கடற்கரைக்குப் போகிறோம். விரிந்து பரந்த கடல்! வெண்ணிலாவின் ஒளி! அகன்ற மணற் பரப்பு! குளிர் சுமந்துவரும் இளங் காற்று! ஊமைக் காயங்களுக்கு ஒத்தடம் கொடுப்பது போன்ற உணர்வு! சிந்தனைகள் வேறுபக்கம் திரும்புகின்றன. அரசியல் நினைவு கள், கட்சிப் பணிகள் இவை வைகள் சில மணித்துளிகள் ஓய்வு பெற்றுக்கொள்கின்றன. பின்னர் நாம் அங்கிருந்து எழும் போது ஓய்வு பெற்ற அந்த நினைவுகளும் நம்மோடு சேர்ந்து எழுந்து விடுகின்றன! . இன்று உன்னைக் கடற்கரைக்கு அழைக்க முடியாது நான்! காரணம் வெளியூர் நிகழ்ச்சிகளுக்குச் செல்லு கிறேன். எனவே, என்னுடன் மலர்ப் பொய்கை ஒன்றினைக் கண்டுகளித்திட வந்திடு. அங்கே உன்னைக் கொண்டுபோய் விட்டுவிட்டு நான் ஊருக்குப் புறப்படு கிறேன். . பார்த்தாயா பொய்கையை! மணிகள் போலும் நிறங் களையுடைய மலர்கள் பூத்துக் குலுங்கியிருக்கின்றன. வானில் தண்ணொளி பரப்பி முத்துநகை கொட்டுகிற முழு க-7A-5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/79&oldid=1695304" இலிருந்து மீள்விக்கப்பட்டது