பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கலைஞர் நிலவையும் பார்! அன்னங்கள், சேவலும் பெடையுமாக இணை இணையாகச் சேர்ந்து நீந்துகிற இன்பமே இன்பம்! அந்த இனிய காட்சியை நம்மைப் போலவே ஒருவர் வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாரே; யார் அவர்? அழகிய எளிமையான தலைப்பாகை! அடர்ந்த மீசை! வாட்டசாட்டமான உருவம்! பழங்காலத் தமிழ்ப் பெருமகன்! ஆம், புலவர் பெருமகன் - அவர் பெயர் என்ன தெரியுமா? மருதன் இளநாகனார்! கடைச் சங்கப் புலவர். கலித்தொகையில் மருதக்கலி பாடியவர். அவர் இதழ்கள் அசைகின்றன! வா. கவனிப்போம்! கவிஞர்கள் கவிஞர்கள் வாய் அசைந்தால் கனியும், கன்னலும் கிடைக்கும்! வா, வா! சற்று அருகே சென்று கவனிப்போம். அவர் மெல்லிய குரலில் பாடுகிறார். "மணி நிற மலர்ப் பொய்கை மகிழ்ந்தாடும் அன்னந்தன் அணி மிகு சேவலை அகலடை மறைத்தெனக் கதுமெனக் காணாது கலங்கியம் மடப்பெடை மதிநிழல் நீருட் கண்டதுவென உவந்தோடித் - துன்னத்தன் எதிர் வரூஉந் துணை கண்டு மிக நாணிப் பன்மலரிடைப் புகூ உம்..." பொய்கையில் உள் ள அன்னப் பெடைகள் ஓடிப்போய் பூக்களின் புதருக்குள் ஒளிந்து கொள்கின்றனவாம், ஏன் தெரியுமா? அதற்குத்தான் காரணம் கூறுகிறார் புலவர். அன்னச் சேவலும் அன்னப் பெடையும் பொய்கையில் மகிழ்ந்து விளையாடின. அப்போது அகன்ற தாமரை யான்றின் இலை சேவலன்னத்தை மறைத்துக் கொள் து. படை, தன் இன்பக் காதலனைக் காணாது தவிக் சிவந்திருக்கும் கால் துடுப்பு கொண்டு, வெள்ளைப் கிறது கிறது. படகு போன்ற தன் உடலை அங்குமிங்கும் திருப்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/80&oldid=1695305" இலிருந்து மீள்விக்கப்பட்டது