பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கடிதம் 71 அலைகிறது. சேவலன்னத்தைக் காணவில்லை. பொய்கையில், வண்ணிலவின் நிழல்விழுந்து அசைந்தாடிக் கொண்டிருப் பதை அந்தப் பெண் அன்னம் பார்த்து விடுகிறது, தன் சேவல்தான் அதுவென்று மகிழ்ந்தோடி அதனைத் தழுவிக் கொள் ள் ஓடுகிறது. அதற்குள் தாமரை இலை மறைவி லிருந்து விடுபட்டு தன்னை நோக்கி வருகின்ற ஆண் அன்னத்தை அந்த பெடை கண்டுவிடுகிறது. அதற்கு வெட்கம் தாங்கவில்லை. அன்னச் சேவல் எனக் கருதி அமுத நிலாவை அணைத்துக் கொள்ளச் சென்ற அவசரம் கண்டு ஆண் சிரிக்குமே என்ற நாணத்தால் தன் முகம் மறைத்துக்கொள்ள மலர் புதரில் ஒளிந்துகொள் கிறது. தன் மருதன் இளநாகன், மலர்ப் பொய்கையின் எழிலையும், அந்த எழிலுக்கு எழில் கூட்டும் இன்ப இணைகளின் காதல் விளையாட்டையும் எத்துணை நேர்த்தியாகச் சித்திரம் வரைந்து காட்டுகிறார், பார்த்தனையா! இதுபோன்ற கருத்துக்களின் சுரங்கமாகத்தான் தமிழ் லக்கியம் திகழ்கிறது! உன் களைப்பு, சிறிது தீரட்டும் என்றுதான் கலித்தொகை காட்சியில் ஒரு கட்டத்தை விவரித்தேன். இனித் தொடர்ந்து இல்லாவிடினும் இடை விடையே இத்தகைய காட்சிகளை உனக்குக் காட்டிடுவேன்! . அன்புள்ள மு.க. 9-6-76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/81&oldid=1695306" இலிருந்து மீள்விக்கப்பட்டது