பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பள்ளிக்குச் சென்று வந்தேன் ! உடன்பிறப்பே, பிறந்த ஊர், படித்த ஆரம்பப் பள்ளிக்கூடம் வாழ்ந்த இடம் - இவைகளையெல்லாம் நீண்ட நாள் இடை வெளிக்குப் பிறகு பார்ப்பதென்றால் அந்த இன்பமே தனியானதுதான்! எனக்கும், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கும் பகுத் தறிவுச் சுடரொளி பாய்ச்சிட்ட பள்ளிக்கூடமன்றோ கு ஈரோடு நகரம்! - இருட்டை விரட்டும் பரிதியென - அடிமை உணர்வை வெட்டியெறியும் போர்வாளென- மூட நம்பிக்கைகளைத் தகர்த்திடும் சம்மட்டியென - ஈரோடு நகரில் பீடுநடை போட்டு எழுந்தவர்தான் பெரியார் ராமசாமி! அவர் உலவிய அந்த மண்ணை மதிப்பதிலேயே நமக்கோர். பருமை! அங்குதான் 9-6-76 விடியற்காலை நாலுமணி அளவில் ரயிலில் சென்று இறங்கினேன். எத்தனையோ கிறேன். முறை அந்த ஊருக்குச் சென்றிருக் புதுவை நகரில் மாற்றாரின் தாக்குதலுக்கு ஆளாகிக் கிடந்த எனக்கு மருந்து தடவி, சிகிச்சை அளித்து அன்பு மாழி கூறி ஆறுதல் வழங்கி குடியரசு அலுவலகத்துக்கு வந்துவிடு என்று 1945 - ஆம் ஆண்டு தந்தை பெரியார் விடுத்த அழைப்பை ஆணையாகக் கொண்டு ஆனந்தமுடன் அந்நகருக்குச் சென்றேன் முதல் முறையாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/82&oldid=1695307" இலிருந்து மீள்விக்கப்பட்டது