பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 73 நானும், தவமணிராசனும், ஜனாவும், சங்கரய்யாவும் அங்கு குடியரசு அலுவலகத்தில் பணியாற்றிய அந்த இன்ப மான நாட்களைத்தான் மறந்துவிட முடியுமா? சண்முகவேலாயுதமும், சம்பத்தும், முத்தும், சந்தான மும், செல்வனும், சுப்பையாவும், லூர்துசாமியும், ராஜு வும், அப்பாவுவும் என்னுடனு தோழமை உணர்வுடன் அந்த நாட்கள் எளிதில் மனத்தைவிட்டு அளவளாவிய அகன்றுவிடக் கூடியவைகளா? பெரியார் வீட்டில் சாப்பாடு, குடியரசு அலுவலகத்தில் துணை ஆசிரியர் பொறுப்பு, இப்படி ஓடிய அந்த ஓராண்டுக் காலத்தில் எங்களுக்கென பெரியார் நடத்திய இரவுப் பள்ளிகள் எத்தனை! எத்தனை! இரவு உணவை முடித்துவிட்டு அவர் வீட்டு மொட்டை மாடி யில் நாங்கள் அவர் எதிரே அமர்ந்து கொள்வோம். மணி நகர்வதே தெரியாமல் பெரியாரின் பகுத்தறிவு விளக் கத்திலே மனதைப் பறிகொடுத்திருப்போம். விலை மதிக்க முடியாத அந்த நாட்களின் நினைவு நெஞ்சை விட்டு விடை பெற்றுக்கொள்ளுமா என்ன? வாரத்தில் சில நாட்களில் இரவு 12 மணிக்கு மேல், சண்முகவேலாயுதம் தலைமையில் நாங்கள் ஐந்தாறு பேரும் ரயிலடிக்குச் செல்வதும், அங்கே எங்காவது ஒரு மூலையில் அமர்ந்து நீண்ட நேரம் அளவளாவி மகிழ்வதும் மறந்திடக் கூடிய நிகழ்ச்சிகளா? ஈரோட்டுப் பள்ளிக்கூடப் பயிற்சி முடிந்து இப்போது ஆண்டுகள் முப்பதுக்குமேல் ஆகிவிட்டன என்றாலும், அன்றைய அந்தப் பயிற்சிக்கூடத்திலே இருந்தவர்கள் இன்றைக்குப் பல்வேறு இடங்களில் இருக்கிறார்கள் - பல்வேறு பணிகளில் இருக்கிறார்கள் - ஏன்; ஏன்; பல்வேறு கட்சி களிலேகூட இருக்கிறார்கள். எனினும் - அன்று தோன்றிய அந்த பாச உணர்வு பட்டுப்போய்விட்டது என்று நான் முடிவாகக் கூறிவிட மாட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/83&oldid=1695308" இலிருந்து மீள்விக்கப்பட்டது