பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கலைஞர் அந்த நகருக்குத்தான் உடன்பிறப்பே, நான் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றேன். ஈரோட்டில் நடைபெற்ற வரலாற்றிச் சிறப்புமிக்க மாநாடு பற்றி நீ கேள்விப்பட்டு இருப்பாய்! 1948-ல் நடந்த அந்த மாநாட்டில்தான் பெரியாருக்கும் அண்ணாவுக்குமிடையே ஏற்பட்டிருந்த சிறிய பிணக்குகூட தீர்ந்தது. பெட்டிச் சாவியை அண்ணா ன் கையில் கொடுக்கிறேன் என் று பெரியார் அறிவித்த மாநாடு அது! அந்த மாநாட்டில் நான் எழுதி நடித்த தூக்குமேடை நாடகமும், நண்பர் தங்கராசு எழுதிய நடிகவேள் ராதா அவர்களின் ரத்தக்கண்ணீர் நாடகமும் நடந்தன. அதன் பிறகு அந்நகரில் எத்தனையோ பொதுக்கூட்டங் களில் பேசியிருக்கிறேன். முன்னேற்றக் கழகம் தொடங்கிய பிறகு நண்பர் சம்பத் அவர்களே முன்னின்று ஒரு பெரிய கூட்டத்தை ஏற்பாடு செய்து, அந்தக் கூட்டத்தில் அவரே என்னை வர வேற்றுப்பேசி மகிழ்ந்த அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் இன்றும் பசுமையானவைதான் எனக்கு! அரசியல் அலைகள் நட்பு என்னும் பாறைமீது ஓங்கி ஓங்கி மோதினாலுங்கூட, அந்த நட்புப் பாறை அவ்வளவு விரைவில் கரைந்து கடலில் மறைந்துவிடுவதில்லை அல்லவா? அறிஞர் அண்ணா சிலையைத் திறந்துவைத்த விழா ஈரோட்டில் மிகப் பெரிய விழா! அதிலே கலந்து கொண்டு இருக்கிறேன். அதன் பிறகு பெரியார் சிலை திறப்பு விழா. அந்த விழாவுக்குப் பெரியார் அவர்களேகூட வந்திருந்தார். பகுத் தறிவு இயக்க வரலாறும் தேவையும் என்பதுபற்றி நீண்ட தோர் உரையாற்றினேன். அதற்குப் பின்னர் பெரியார் பெயரால் ஒரு அரசினர் மருத்துவமனைத் திறப்பு விழாவுக்குச் சென்றிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/84&oldid=1695309" இலிருந்து மீள்விக்கப்பட்டது