பக்கம்:கலைஞர் கடிதம் 7.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 75 திருமதி. மணியம்மையார் அவர்கள் மனமுவந்து வழங்கிய பெரியார் பிறந்த இல்லத்தைத் தமிழக அரசின் சார்பில் நினைவுச் சின்னமாக்கிய விழாவில் நண்பர் வீரமணி வரவேற்றிட நானும், அம்மையார் அவர்களும் அமைச்சர் பெருமக்களும் கலந்துகொண்டோம். உடன்பிறப்பே, இப்படி எத்தனையோ மறக்க முடியாத நிகழ்ச்சிகள் என்விழி திறந்த பள்ளிக்கூடமாம் ஈரோடுத் திருநகரில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நடந்திருக் கின்றன. அந்த நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றபோது கண்டதை. விடப் பன்மடங்கு ஆர்வப் பெருக்கினை. அன்பை, பாசத்தை, எழுச்சியை, இப்போது ஈரோடு ரயிலடி வர வேற்பிலும் தொடர்ந்து நடைபெற்ற வெள்ளாங்கோயில் புஞ்சைப்புளியம்பட்டி, ஈரோடு திருமண விழாக்களிலும் என்னால் காண முடிந்தது. ரயிலடிக்கு வந்திருந்த கழகக் கண்மணிகள் ஒவ்வொரு வரும் தவறாமல் கொடியேந்தி வந்திருந்த அந்த மாட்சி என்னைப் புல்லரிக்கச் செய்தது. கொடிக் காட்டுக்குள் புகுந்து செல்வது போலத்தான் இருந்தது. வழிநெடுகப் பல புகைவண்டி நிலையங்களில் ஆபிரம் ஆயிரமாக உடன் பிறப்புக்கள் வரவேற்றனர். அவர்கள் அளிக்கும் வா ழ்த் துக்கள் என் கையில் திணிக்கும் விசாரணைக் கமிஷன் செலவு நிதி என்னை உற்சாகப் படுத்துகின்றன எனினும், மேலும் நமது கழகத்தினர் கட்டுப்பாடு காக்கவேண்டும் என்பதை நான் தொடர்ந்து கூறவேண்டியவனாகவே இருக்கிறேன். பெருந்திரளாகக் கூடுகிற இடங்களில் ஆர்வ அலைகள் எழுவதை நான் குறை கூறமாட்டேன். தடுத்திடவும் முற் படேன். ஆர்வம் அளவு கடந்து போகும்போது இடி படுதல் - மிதிபடுதல் உடைகள் கிழிபடுதல் - இப்படிப் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_7.pdf/85&oldid=1695310" இலிருந்து மீள்விக்கப்பட்டது